சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (எம்.எல்.ஏக்கள்) சிறப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
பயிற்சி முகாமில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், "இது முற்றிலும் ஒரு 'விஜய் மாடல் அரசு' ஆகும். தற்போதைய சூழலில் தமிழக மக்களின் எதிர்காலம் மிகவும் பத்திரமாக இருக்கிறது. எதிர்காலம் என்னாகுமோ, ஏதாகுமோ என்று ஒரு காலத்தில் கதிகலங்கிக் கிடந்த மக்களுக்கு, தன்னுடைய புன்னகையாலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய ஒரு மாபெரும் தலைவர் தான் நம்முடைய முதல்வர் விஜய்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் பெருமைகளையும், முதல்வரின் ஆளுமையையும் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "இந்த தமிழக சட்டமன்றத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற தீர்மானங்களும், கொண்டுவரப்பட்ட சட்டங்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கு என்றும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றன.
ஒட்டுமொத்த இந்திய தேசமே வியந்து பாராட்டும் வகையிலான பல உன்னதத் திட்டங்களை இந்தத் தமிழகம் நாட்டிற்குத் தந்திருக்கிறது. அத்தகைய பெருமைமிக்க சட்டமன்ற வரலாற்றை எப்போதும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் தான் முதல்வர் விஜய்" என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழக சட்டசபை வரலாற்றை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.,க்கள் நூலகத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}