டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்து பேசியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு எதற்கு என்று பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம், புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காகவும், தமிழ்நாட்டு நிலவரங்கள் குறித்து பேசுவதற்காகவும் ஆளுநர், பிரதமரைச் சந்தித்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் குதித்ததால் கூட்டத் தொடர் முழுமையாக நடைபெற முடியாமல் அமளி துமளியுடனேயே முடிந்தது.
தமிழ்நாட்டிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜகவுக்கு எதிராக திமுக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மறுபக்கம் மத்திய அரசு மும்மொழி கொள்கையை வற்புறுத்தி வருவதாகவும் மாநில அரசு குற்றம் சாட்டி வருகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகிறது திமுக.
இந்தப் பின்னணியில் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு தொடர்பாக ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே உரசல்களும் நிலவி வருகின்றன. இந்த நிலையில், 2025ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. கடந்த ஆண்டு சட்டசபைக் கூட்டத்தில்தான் ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்காமல் சலசலப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}