சென்னை: 20 வகையான அரசு பணிகளுக்கு டிஎன்பிசி எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் ஆள் சேர்க்க உள்ளது. இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும்.
பல்வேறு வகையான அரசு வேலைகளுக்கு தேவைப்படும் ஆட்களை எடுக்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் காலியாக உள்ள வேலை விவரம்:
அரசு சட்டக் கல்லூரிகளில் பிடி துறை இயக்குநர் பதவி (12 பணியிடங்கள்), மேனேஜர் கிரேட் 3 (2), சீனியர் ஆபீசர் (9), உதவி மேலாளர் (14), உதவி மேலாளர் (லீகல் - 2), தமிழ் ரிப்போர்ட்டர் (5), இங்கிலீஷ் ரிப்போர்ட்டர் (5), அக்கவுண்ட்ஸ் ஆபீசர் கிளாஸ் 3 (1), அக்கவுண்ட்ஸ் ஆபீசர் (3), உதவி மேலாளர் - அக்கவுண்ட்ஸ் (21), துணை மேலாளர் அக்கவுண்ட்ஸ் (1), உதவி மேலாளர் பினான்ஸ் (1), உதவி பொது மேலாளர் (1), விவசாயத்துறை உதவி இயக்குநர் (6), புள்ளியியல் உதவி இயக்குநர் (17), சமூக நலத்துறை பெண்கள் முன்னேற்றத்துறை உதவி இயக்குநர் (3), முதுநிலை உதவி இயக்குநர் பாய்லர் (4), பர்சார் (6), டவுன் பிளானிங் உதவி இயக்குநர் (4), உதவி மேலாளர் புராஜக்ட்ஸ் (2).
மொத்தம் 118 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இந்த பணிகளுக்கு ஆளெடுப்பு நடைபெறவுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 14ம் தேதி இரவு 11.59 மணி. திருத்தப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 19ம் தேதி அதிகாலை 12.01 முதல் 21ம் தேதி இரவு 11.59 மணிக்குள்.
தேர்வு குறித்த விவரம்:
முதல் தாள் தேர்வு - ஜூலை 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை.
2ம் தாள் தேர்வு - ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பை அணுகலாம்.
https://tnpsc.gov.in/Document/english/07_2024_CTS_English_.pdf
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}