மதுரை: அரிட்டாபட்டி கிராம மக்கள் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துள்ள நிலையில் , டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, வள்ளாளபட்டி உள்ளிட்ட சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மேலூர், மதுரை தல்லாகுளம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு தற்போது கைவிட்டு விட்டது. இதையடுத்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி தங்களுக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரிட்டாபட்டியில் இன்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் தற்போது டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசின் ஒருபோது அனுமதிக்காது என்று உறுதி அளித்து இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமரை வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதினார். மேலும் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 9.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. இந்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்கள்.
இதன்படி இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11 ஆயிரத்து 608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சங்கீதா சட்டம் 2023ன் கீழ் மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட நான்கு குற்ற வழக்குகளும் இன்று திரும்ப பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டெல்லி கார் குண்டு வெடிப்பு... காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி!
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தேர்தல் குக்கரில் வெற்றி விசில் அடிக்குமா.. விஜய் ரசிகர்கள் + தொண்டர்கள் விரும்புவது இதைத்தானா?
அறிவுத் திருவிழா இல்லாமல்.. அவதூறுத் திருவிழா: தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்!
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
குத்துபாட்டிற்கு நடனமாடும் ஸ்ரேயா...அடுத்த ஹிட் பாட்டு ரெடி
காலபைரவர் ஜெயந்தி .. தேய்பிறை அஷ்டமி அல்லது காலாஷ்டமி தினம்.. பைரவர் வழிபாடு சிறப்பு!
தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!
தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
{{comments.comment}}