- சிவ. ஆ.மலர்விழி ராஜா
நம் வாழ்வில்
பார்க்ககூடாத ஒரு தினம்....
கடலன்னை
அகோர தாண்டவம்
ஆடிய தினம்....
சின்னஞ்சிறு குழந்தைகளும்
உறவை பிரிந்த தினம்...
வாழ்வின் முடிவு
இதுதான் என்று
வலியை தந்த தினம்.....
சுறாவை போல் வந்து
உயிர்களை அள்ளி
விழுங்கிய தினம்.....

அழகான அலையென்று
அருகே சென்றவர்களை
சிறை பிடித்த தினம்....
வலைவீசி மீன் பிடிப்பது
போல் அலை வீசி நம்
இனம் அழிந்த தினம்.....
ஆழியின் தீராத பசிக்கு
நம் மக்கள் தன்னை
அர்பணித்த தினம்.....
உப்பு காற்றை சுவாசித்த
உயிர்களை உயிர் பலி
வாங்கிய தினம்.....
இனம் மொழி கடந்து
எல்லாம் ஒன்றென்று
உணர வைத்த தினம்.....
இரக்கமில்லாத மனிதனையும் இயங்க
வைத்த தினம்.....
சுற்றி சுழன்று பட்டு
குழந்தைகளையும்
விட்டு செல்லாத தினம்....
கலங்கரை விளக்கம் இருந்தாலும் கரை
தேடி வந்து உயிர்களை
உள்வாங்கிய தினம்.....
உறவுகளை பிரித்து மனங்களை
இரணமாக்கிய தினம்...
இதயத்தை உடைத்து
இரும்பாக்கும் தினம்
இனி வாழ்வில் வேண்டாம்
சுனாமி தினம்......!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
பிரியாவிடை!
திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!
{{comments.comment}}