சென்னை: வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 1427 கோடி பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025- 26 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு, வரும் நிதி ஆண்டில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த பிற முக்கிய அம்சங்கள்:
82 லட்சம் ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.
காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு, வடிநிலப் பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்படும். அதேபோல் கல்லணை கால்வாய் பாசனப்பகுதிகளிலும் சி,டி பிரிவு கால்வாய்கள் தூர்வாரப்படும். மொத்தம் 2,925 km நீள கால்வாய்களை தூர்வார ரூபாய் 13.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பொறியியல் துறை இயந்திரங்களை பயன்படுத்தி 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தூர்வாரப்படும். 100 புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் ரூபாய் 2.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்குவதற்கு ரூபாய் 1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின் இணைப்பு இல்லாத ஆயிரம் விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூபாய் 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு குறு விவசாயிகள் பயனுக்காக ரூபாய் 10.5 கோடியில் 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்கள் வழங்க ரூபாய் 17.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் 1.6 கோடியில் பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கம் அமைக்கப்படும். ரூபாய் பத்து கோடியில் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க முந்திரி வாரியம் அமைக்கப்படும். பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலாசாகுபடியை ஊக்குவிக்க ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் 20 கோடி செலவில் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். இந்த சேமிப்பு கிடங்குகள் ஒவ்வொன்றும் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டதாக உருவாக்கப்படும்.
வேளாண் விளைபொருளுக்கான 100 மதிப்பு கூட்டு மையங்கள் ரூபாய் 50 கோடி செலவில் அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு ரூபாய் பத்து லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூபாய் 50.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 35 வேளாண் விலைப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் வரகு, நத்தம் புலி, காரைக்குடி கொய்யா, கப்பல்ப்பட்டி முருங்கைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் 2500 ஏக்கர் சீமை கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ரூபாய் 6 கோடி செலவில் வேளாண் தர நிர்ணய ஆய்வகம் அமைக்கப்படும்.
விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூபாய் 10 ஆயிரத்து 346 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் ரூபாய் 1,427 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பயிர் கடன் தள்ளுபடி செய்ததற்கு தவணைத்தொகை வழங்க ரூபாய் 1,477 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.
ரூபாய் ஒரு கோடி செலவில் உதிரி வகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும்.
ஏழைப் பெண்கள் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புக்கான டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி உருவாக்கப்படும்.
5000 பால் பண்ணைகள் அமைக்க 4 சதவீத வட்டியுடன் மானியம் வழங்கப்படும்.
80 ஆயிரம் இயற்கை மேலாண்மை பணிகளுக்கு ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர்களுக்கு இலவச மின் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்த ரூபாய் 8,186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவு மானியத்துக்கு ரூ. 12,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழக வேளாண் பட்ஜெட்டிற்கு மொத்தம் ரூபாய் 45, 661.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}