டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த டெல்லி வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சைகாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 9:51 மணிக்கு அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் எம்பிக்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}