மும்பை: தமிழ்நாட்டைப் பாருங்கள்.. இந்தி வேண்டாம் என்று தைரியமாக சொல்கிறது. கேரளாவும் கூட வேண்டாம் என்று சொல்கிறது. அந்த தைரியம் நமக்கும் வேண்டும். மராத்தியில் யாராவது பேச மறுத்தால் முகத்திலேயே அடியுங்கள் என்று மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நீண்ட காலமாகவே இந்தி பேசுவோருக்கு எதிரான போக்கு இருந்து வருகிறது. அங்குள்ள மராத்தியர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாக பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்களுக்கு எதிரான மோதல்கள் அவ்வப்போது வெடித்தும் வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போக்கை மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியான மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே வரவேற்றுள்ளார். மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த குடி பட்வா பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது கூறியதாவது:
மும்பைக்கு வந்து வாழும் சிலர் சொல்கிறார்கள், மராத்தியில் பேச மாட்டோம் என்று. அப்படிப் பேசுவோருக்கு முகத்திலேயே அடி விழும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி உண்டு. அந்த மொழியை நாம் மதிக்க வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும்.
நாளை முதல் ஒவ்வொரு வங்கியாக, நிறுவனமாக செக் பண்ணுங்க. மராத்தியில் பேசுகிறார்களா என்று சோதனை பண்ணுங்க. அனைவரும் மராத்திக்கு ஆதரவாக திரண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டைப் பாருங்கள். இந்தி வேண்டாம் என்று அவர்கள் தைரியமாக சொல்கிறார்கள். கேரளாவும் கூட தைரியமாக நிராகரித்துள்ளது.
ஜாதியால் மக்கள் பிரியக் கூடாது. நமது மாநிலத்தை ஆளுவோர் திட்டமிட்டு மக்களிடையே ஜாதி துவேஷத்தைப் பரப்பி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப ஜாதியைக் கையில் எடுக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் உள்ள இளைஞர்களுக்கு நான் விடுக்கும் ஒரே கோரிக்கை, முதலில் வாட்ஸ் ஆப்பில் வரலாற்றைப் படிப்பதைத் தவிருங்கள். அது அரசியல் ரீதியாக உங்களைப் பிளவுபடுத்த பரப்பபப்படும் பொய். அதிலிருந்து வெளி வாருங்கள். மராத்தியர்களாக ஒன்றிணையுங்கள். அதானிக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்படும் நிலங்கள் குறித்த பிரச்சினையிலிருந்து இவர்கள் நம்மைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றார் அவர்.
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!
இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி
{{comments.comment}}