சென்னை: சென்னை அருகே அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கான காரணம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகள் இதைக் கண்டித்துள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் மூலம் ரூபாய் 1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடையாறு நதியை முழுவதுமாக புணரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து நீர் வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறு குடி அமர்வு செய்வது அவசியமாகும். இதன் ஒரு பகுதியாக அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் மூன்றாவது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன. ஒரு வீடு 17 லட்சம் 390 சதுர அடி.
மேலும் அடையார் ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகை பூநகர் ஆகிய ஐந்து இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 300 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ₹ 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும் பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுபடியாக ஒருமுறை ரூபாய் 5000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூபாய் 2500 என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு ரூபாய் 30,000, மின்சார இணைப்பு கட்டணம் ரூபாய் 2500 என்ற அடிப்படையில் ஒவ்வொரு குடி அமர்விற்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சித் திட்டங்கள் உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி அங்கன்வாடி தொடக்க நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
மேலும் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குடி அமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நதிநீர் சீரமைப்பு திட்டம் என்பதாலும் மழைக்கால வெள்ள தடுப்பு காரணத்திற்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு சீரமைப்பு குடியரசு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!
அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஏன்?.. அரசு தரும் விளக்கம்
கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி அதிரடியாக பணியிட மாற்றம்
வளையங்குளம் துயர நிகழ்வு.. இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் 4 ஆண்டு காலச் சாதனையா? : சீமான்
மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேணும்.. பசங்களைப் பார்த்துக்கணும்.. ஆர்த்தி ரவி அதிரடி டிமாண்ட்!
எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
ரீவிசிட் அடிக்கிறதா கொரோனா.. நிலவரம் என்ன?.. டாக்டர் பரூக் அப்துல்லா சொல்வதைக் கேளுங்க!
தமிழ்நாட்டின் நிதி உரிமையை வெளிப்படுத்த.. 24ம் தேதி டெல்லி செல்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}