சென்னை: சென்னை மாநகரத்தில் பெண்களுக்கான சுய தொழிலை உருவாக்கும் விதமாக 2.5 கோடி மதிப்பீட்டில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மானிய விலையில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பெண்கள் தான் நாட்டின் கண்கள். அதேபோல் இவர்கள் வீட்டின் முதுகெலும்பே என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களின் பணி சிறப்பானது. மிகவும் உயர்வானது. தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் சொந்தக்காலில் நின்று தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தி சாதிக்க பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.இவர்களை போற்றும் வகையில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது தமிழ்நாடு அரசு.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பெண்கள் தான் சமுதாயத்தின் அஸ்திவாரமாக இருக்கின்றனர் என்பதற்கு ஏற்ப, பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதுடன் அதனை செயல்படுத்தியும் வருகிறது. அந்த வரிசையில் மகளிர் உரிமை தொகை, முதியோருக்கு ஓய்வூதியம், பெண்களுக்கு திருமண உதவி திட்டம், விதவை மறுமண திட்டம், கைம்பொன் மறுமணத் திட்டம், ஏழைப் பெண்களின் அரசு நிதி உதவி, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. இது தவிர பெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள், சொத்து உரிமைச் சட்டம், உள்ளிட்ட பல சட்டங்களை வகுத்தும் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டி தருகிறது தமிழக தமிழக அரசு.
இந்த நிலையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக, 2.5 கோடி மதிப்பீட்டில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னை மாநகரத்தில் பெண்களுக்கான சுய தொழிலை உருவாக்கும் நோக்கில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் வங்கி கடன் மானியமாக வழங்குகிறது. இதற்காக மொத்தம் 2.5 கோடி மதிப்பீட்டில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எப்படி விண்ணப்பிப்பது..?
சென்னையில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலங்களை நேரில் அணுக வேண்டும்.
தகுதி என்ன..
அரசு வழங்கும் மானிய விலையில் ஆட்டோக்களை பெற வயதுவரம்பு 25 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக ஆதரவற்ற கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தகுதி வாய்ந்த பெண்கள் இதைப் பயன்படுத்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் திகழ இது நல்ல வாய்ப்பு. இது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}