சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதாகவும், மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி:
தென்கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 13-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான நிலை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
பருவமழைக்கான சூழல் நிலவி வரும் நிலையில்,
கடலூர்,
கன்னியாகுமரி,
மயிலாடுதுறை,
புதுக்கோட்டை,
நாகப்பட்டினம்,
ராமநாதபுரம்,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
தூத்துக்குடி,
திருநெல்வேலி
ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 14) பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:
பருவமழை துவங்கவுள்ளதால், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
பனிக்குப் போர்வையாகவும்.. வெயிலுக்கு நிழலாகவும்!
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆயுதத்தை விட்டெறிந்து அன்பை காணிக்கையாக்குங்கள்
நானிருக்கிறேன் உனக்கு
தேர்வு.. ஒரு நிமிடக் கதை (35)
Thentamil Editorial: சாட்டையைச் சுற்றி அப்படி சுழற்றி விட்டா.. விளையாட்டுகளின் ராஜா.. பம்பரம்!
North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
{{comments.comment}}