ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை தன்னலமற்று உடல் பொருள் ஆவி அனைத்தும் என் பிள்ளைகளுக்கு என்று கொடுத்து வாழும் ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி சொல்லும் நாள் இது.
நல்ல ஆசிரியர்களால் வழி நடத்தப்பட்ட மாணவர்கள் ஒரு போதும் தடம் மாறுவதில்லை.

மாணவர்கள் பலவிதம்
ஒவ்வொருவரும் ஒரு விதம்
ஆனால் ஆசிரிய பெருமக்களோ ஒரே விதம்
நல் வழி தந்து அறிவையும் ஆற்றலையும் பெருக்கி சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் தன் மாணாக்கரைப் பார்த்து மகிழும் உன்னத பணியையச் செம்மையோடு செய்யும் சிற்பிகள்தான் ஆசிரியப் பெருமக்கள்
தட்டிக் கொடுத்து கற்றுக் கொடுப்பதில் தோழனாய், அன்பு காட்டி அரவணைப்பதில் அன்னையாய், குரலை உயர்த்தி குறைகளை சுட்டிக் காட்டி வழி நடத்துவதில் வழி காட்டியாய் வலம் வரும் ஒளி விளக்கு.
கல்வி கற்கும் திறனில் குறையிருந்தால் உன்னால் முடியும் முடியும் என்று திரும்பத் திரும்ப தன் மாணவச் செல்வங்களின் காதில் சொல்லிச் சொல்லி நம்பிக்கை தரும் நட்சத்திரம்.
பிள்ளைகள் தன் சுற்றம் மறந்து குதூகலித்து ஆடிப் பாடி மகிழ்ந்து கற்றுத் தெளிய அறிவு புகட்டும் ஆசான் நமது ஆசிரிய பெருமக்கள்.
ஆசிரியர்களைப் போற்றுவோம்.. சீரிய குடிமக்களாக மாற்றும் பெரும் சேவை செய்யும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்
கட்டுரை: வி. ஜெயலட்சுமி, மஸ்கட்
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}