அ.சீ. லாவண்யா
சென்னை: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டார்.
உங்க விஜய் நா வரேன்... என்ற ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுடன், நடிகர் விஜய் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க மலேசியாவுக்கு இன்று புறப்பட்டார். மலேசியாவில் நடைபெற உள்ள பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கு உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் நடைபெறும் இந்த இசை விழா என்பதால், சர்வதேச அளவில் ரசிகர்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது திரைக்கு வர உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
ஜனநாயகன்' திரைப்படம் சமூக அரசியல் பின்னணியில் உருவாகும் படமாக கருத்தப்படுகிறது. படத்தின் இசை ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், விஜயின் நேரடி பங்கேற்பு விழாவுக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கும் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் பாடல்கள் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் விஜய் பேசும் உரை, படத்தின் கருப்பொருள் மற்றும் ரசிகர்களுக்கான செய்தி ஆகியவை முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், படக்குழுவினரின் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் திட் டமிடப்பட்டுள்ளன. மலேசியா புறப்பட்ட விஜயை விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் உற்சாகமாக வழியனுப்பினர். மலேசிய அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கும் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா மூலம், படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
( அ.சீ. லாவண்யா தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல நகத்திலும் உண்டு!
கலாம் என்றொரு ஆளுமை.. I miss you Kalam...!
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
இயற்கை!
2026ம் ஆண்டு யாருக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான விரிவான ராசிப்பலன்
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
{{comments.comment}}