"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

Jun 17, 2026,05:53 PM IST

சென்னை: தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக, திமுக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காரசாரமான விமர்சனங்களையும் சவால்களையும் முன்வைத்துள்ளார். தவெக அரசின் இந்த அறிக்கை நிதிப் பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தங்களின் இயலாமையை மூடி மறைக்கவே இது வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.


செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.


"யாரைக் காப்பாற்ற 5 ஆண்டு அறிக்கை?"




அவர் பேசுகையில், "பொதுவாக ஒரு புதிய அரசு பொறுப்பேற்கும் போது கடந்த 10 ஆண்டுகால நிதி நிலவரத்தை விளக்கும் வெள்ளை அறிக்கையை வெளியிடுவது தான் மரபு. ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் சரி, முந்தைய 10 ஆண்டுகால நிதி நிலைமை குறித்த விரிவான அறிக்கைதான் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசு ஏன் 10 ஆண்டுகால வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை? வெறும் 5 ஆண்டுகால அறிக்கையை மட்டும் வெளியிட்டதன் பின்னணி என்ன? யாரைக் காப்பாற்ற இந்த 5 ஆண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.


இது வெறும் ‘எஸ்கேப்பிசம்’!

மேலும், இந்த வெள்ளை அறிக்கையை "எஸ்கேப்பிசம்" (Escapeism - பொறுப்பில் இருந்து நழுவுதல்) என்று தங்கம் தென்னரசு வர்ணித்தார். தவெக அரசு தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்பாமல், நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தப்பிக்க முயல்கிறது. தங்களின் நிர்வாக இயலாமையை மறைப்பதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை என்ற போர்வையை அவர்கள் கையில் எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.


அரசியலில் இருந்து விலக தயார் :

தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு தங்கம் தென்னரசு ஒரு பகிரங்க சவாலை விடுத்தார். "தவெக அரசு இதே தற்போதைய பாணியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ரூ. 20 லட்சம் கோடியாக உயரும். திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனை விட, நீங்கள் (தவெக அரசு) நிர்வாகத் திறமையோடு குறைவாகக் கடன் வாங்கிக் காட்டினால், நான் எனது அரசியல் பொறுப்பில் இருந்து விலகத் தயார்" என்று அதிரடி சவால் விடுத்துள்ளார்.


புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, முந்தைய திமுக அரசின் நிதி நிர்வாகத்தைக் கையாண்டு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள இந்த சவாலும் விமர்சனமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்