ஆன்மீகக் குருக்களில் சிறந்தவர்.. அன்பையும் கருணையையும் போதித்த சிந்தனை.. சாய்பாபா!

Apr 24, 2025,12:41 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சீரடி சாய்பாபா ஆன்மீக குருக்களில் சிறந்தவர். அவரது போதனைகள் அன்பையும்,கருணையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகின்றன. சாய்பாபா இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின்  கூற்றுகளை  இணைத்து போதித்தார் .அவர் வாழ்ந்த மசூதிக்கு துவாரகமாக என்ற இந்து பெயரை கொடுத்தார். ஹிந்து மற்றும் முஸ்லிம் சடங்குகள் நடைமுறைப்படுத்தினார். சாய்பாபா செல்வச் செழிப்புடன் வாழ வில்லை அவர் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்.


நம்பிக்கை மற்றும் பொறுமை:




சாய்பாபாவின் போதனைகள் "ஷ்ரத்தா" மற்றும் "சபூரி".  "ஷ்ரத்தா" என்றால் நம்பிக்கை ; "சபூரி" என்றால் பொறுமை. இவை இரண்டையும் வலியுறுத்துகிறார். சாய்பாபா 1838இல்  பிறந்தார் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி 1918 இல் இறந்தார். 1858 ஆம் ஆண்டு மேற்கு இந்திய மாநிலம் ஆன மகாராஷ்டிராவில் உள்ள சீரடிக்கு வந்து 1918இல் இறக்கும் வரை அங்கேயே இருந்தார்.


அவரது வாழ்க்கை குறிப்புகளின் படி சாய்பாபா "சுயத்தை உணர்தல்" மேலும் "அழியும் பொருட்களின் மீதான அன்பை "விமர்சித்தார். அவர் போதனைகள் அன்பு, மன்னிப்பு ,பிறருக்கு உதவுதல், தொண்டு, மன நிறைவு ,அமைதி, கடவுள் மற்றும் குரு மீதான பக்தி இவற்றை மையமாகக் கொண்டிருக்கின்றன.


சீரடி சாய்பாபா கோவில்: சீரடி கோவில் புனித யாத்திரை தளங்களில் ஒன்றாகும். சீரடி கோவில் சிந்து துர்க்கில் உள்ள கூடலில் அமைந்துள்ளது. 1922ல் இக்கோவில் கட்டப்பட்டது .கோவிலின் உட்புறமும் வெளிப்புறமும் உள்ள கூம்பு தங்கத்தால் மூடப்பட்டிருக்கும். கோவிலின் உள்ளே சாய்பாபா சிலை இத்தாலிய பளிங்கு கல்லால் செதுக்கப்பட்டு, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தங்க கிரீடம் அணிந்து பாபா காட்சியளிக்கிறார்.


சாய்பாபா உயிருடன் இருந்த காலம் முதல் சடங்குகள் ,மரபுகளை பின்பற்றி சமாதி  மந்திருக்குள் தினமும் நான்கு ஆரத்திகள் நடைபெறுகின்றன. 


1. காகட ஆரத்தி -காலை ஆரத்தி 4 :30  மணிக்கு நடைபெறுகிறது.

2. மதியன் ஆரத்தி- மதியம் ஆரத்தி 12 மணிக்கு நடைபெறுகிறது.

3. தூப் ஆரத்தி -மாலை ஆரத்தி 6:30 மணிக்கு நடைபெறுகிறது.

4. ஷேஜ் ஆரத்தி -இரவு ஆரத்தி  முப்பது10:30 மணிக்கு நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களில் இம்முறையே இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.


சீரடி சாய்பாபா கோவிலில் பல்லக்கு ஊர்வலம் ஒவ்வொரு வியாழக்கிழமை நடைபெறுகிறது .சமாதி மந்திரிலிருந்து, துவாரகமாயி வரை, அங்கிருந்து சாவடி வரை, மற்றும் மீண்டும் சாய்பாபா மந்திர் வரை ஊர்வலம் நடைபெறுகிறது .சாதி மத பேதம்  இன்றி அனைவரும் சமாதி மந்திரில் தரிசனம் செய்து பிரசாத ஆலயத்தில் இலவச உணவு உட்கொள்கின்றனர்.


மகாராஷ்டிரா தமிழ்நாடு ஒடிசா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா குஜராத் போன்ற மாநிலங்களில் சீரடி சாய்பாபா கோவில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. சாய்பாபாவின் ஆதரவாளர்கள் நெதர்லாந்து ,கனடா, அமெரிக்கா, கரீபியன், ஆஸ்திரேலியா ,மலேசியா, ஜெர்மனி ,பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பரவி உள்ளனர்


வியாழக்கிழமை வழிபாடு:


சாய்பாபா வழிபாடு வியாழக்கிழமைகளில் செய்வது சிறப்பு .பாபா படம் அல்லது உருவச்சிலை வைத்து அவரது நாமம் 108 முறை கூறி தீபாராதனை காண்பித்து, நைவேத்தியமாக வீட்டில் என்ன இருக்கிறதோ பிஸ்கட் ,சாக்லேட்,, பால்கோவா, கற்கண்டு என்று நம்மிடம் உள்ளவற்றை வைத்து வழிபடுவது சிறப்பு. நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் வழிபடுவது முக்கியம்.


மூலமந்திரம் :'ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி' இந்த ஒற்றை வரி மூல மந்திரம் 108 முறை மனதார பக்தி சிரத்தையுடன் கூற சாய்பாபா அருள் கட்டாயம் கிடைக்கும்.


சாய்பாபாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் .மேலும்  இணைந்து இருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

news

பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்