சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத்துறை வரும் மார்ச் 25ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மது ஆலைகள், மது விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் தலைமை நிறுவனம் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் டாஸ்மாக் விவகாரத்தில் தொடர்புள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியது. குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம், அமலாக்கத்துறையினர் சோதனையின் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் மாநில அரசின் அனுமதியின்றி பி எம் எல் ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டாஸ்மார்க் முறைகேடு விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொய் சொல்ல வேண்டாம். அனைத்து செய்திகளிலும் வந்துள்ளது. இரவில் ஏன் சோதனை நடத்த வேண்டும் என நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் அளித்த அமலாக்க துறையினர் நாங்கள் இரவில் சோதனை நடத்தவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறை பிடிக்கவும் இல்லை. யாரை துன்புறுத்துவமும் இல்லை என தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி இவ்விவகாரத்தில் மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதே சமயத்தில் அமலாக்கதுறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
தாத்தா (கவிதை)
கோல்டன் பீகாக் விருது போட்டியில் சிவகார்த்திகேயனின் அமரன்.. கமல்ஹாசன் பெருமிதம்
திண்ணை வைத்த வீடு
வீதியும் கடலாகும்!
{{comments.comment}}