சென்னை: ரேஷன் கடைகளில் முறையீடுகளை தடுக்கும் நோக்கில் மின்னணு தராசுடன் pos கருவி இணைக்கும் நடைமுறை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது. தற்போது சென்னையில் ஒரு சில கடைகளில் மட்டுமே இந்த நடைமுறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில், உணவுப் பொருட்களை மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதே சமயத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இருப்பது இல்லை எனவும், இதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படியே சமீபத்தில் குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் டிஜிட்டல் மயமான ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டது. அதேபோல் பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி வந்த நிலையில், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது தமிழக அரசு. அதாவது ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், பிஓஎஸ்(pos) கருவியுடன் மின்னணு தராசு இணைக்கும் நடைமுறை சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஒரு சில கடைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விரைவில் இந்த நடைமுறை மாநில முழுவதும் அமலுக்கு வரவுள்ளது எனவும், இதனால் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் சரியான எடையில் பொருட்கள் விற்கப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் கூட்டுறவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Pos(Point of Sale) என்றால் என்ன..?
POS, விற்பனையாளர்கள்
பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இது கணினி அடிப்படையிலான பணப் பதிவேடாகும், இது ஆர்டர்களை எண்ணுதல், பணம் செலுத்துதல், சரக்கு மற்றும் கொள்முதல்களைக் கண்காணித்தல், விலைப் பட்டியல்களை உருவாக்குதல், சந்தைப்படுத்தல், தரவைச் சேகரித்தல் ஆகியவற்றைச் செய்யும் திறன் கொண்ட மென்பொருள் மற்றும் வன்பொருளை கொண்டுள்ளது.
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}