- க. யாஸ்மின் சிராஜூதீன்
இசையே உள்ளக்களிப்பே !
உற்சாகமே !
ஒலியெல்லாம் இசையே
நம் தாய்மொழியே !!
சூரியனின் ஒளியே
பகலுக்கு இசையே!!
சந்திரனின் ஒளியே
இரவுக்கு இசையே!!
அலையின் ஓசையே

கடலுக்கு இசையே!!
இடியின் முழக்கமே
மழைக்கு இசையே!!
மழையின் மணமே
உயிர்களுக்கு
இசையே!!
உயிர்களின் நடமாட்டமே
பூமிக்கு
இசையே!!
காற்றின் மொழியே இயற்கைக்கு இசையே!!
நீரின் ஓட்டமே வேளாண்மைக்கு
இசையே!!
குருதியின் ஓட்டமே உடலுக்கு
இசையே!!
குழந்தைகளின் சிரிப்பே வீட்டிற்கு
இசையே!!
அன்பின் ஆழமே தம்பதிகளுக்கு இசையே!!
குழந்தைகளின் கூச்சலே பெற்றோருக்கு இசையே!!
மூத்தோர் அறிவுரையே இளையோர்க்கு இசையே!!
மாணவர்களின் சத்தமே ஆசிரியர்களுக்கு இசையே !!
பள்ளியின் மணியோசையே மாணவர்களுக்கு இசையே!!
நட்பின் ஆழமே நண்பர்களுக்கு இசையே!!
இயந்திரத்தின் சத்தமே தொழிலாளர்களுக்கு இசையே!!
போக்குவரத்தின் சத்தமே ஓட்டுனர்களுக்கு இசையே!!
வண்டின் ரீங்காரமே மலருக்கு இசையே!!
பயிற்சியின் விளைவே வெற்றிக்கு இசையே!!
உளியின் ஓசையே சிற்பிக்கு இசையே !!
மனதில் மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு இசையே!!
சத்தம் , இரைச்சல், ஓசையெல்லாம் தொழில்,
இருக்கும் இடம் சார்ந்து இசையே!!
விரும்பிக்கேட்டால் எல்லாம் இசையே!!
வாழ்க்கையை ரசித்து வாழ்ந்திடு
வாழ்க்கை உனக்கு இனிய இசையே!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}