காத்மண்டு : நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 903 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பனிப்பாறைகளில் சரிந்து, உருகியதால் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை இழந்து பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவுகளில் சிக்கியும் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் :

சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கான்கிரீட் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பொருட்டு ஜேசிபி (JCB) உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் பயன்பாட்டில் இறக்கப்பட்டுள்ளன.
செம்மண் மற்றும் களிமண் வெள்ள நீர் சூழ்ந்துள்ள அபாயகரமான பகுதிகளில், உயிர்காக்கும் உடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் மக்கள் வீடுகளின் மேற்கூரையிலும், உயரமான கட்டடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள் :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனினும், தொடரும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.
காணாமல் போன 4,247 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையைச் சமாளிக்க நேபாள அரசு சர்வதேச சமூகத்தின் உதவிகளையும் எதிர்பார்த்துள்ளது.
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}