சர்வதேச மகளிர் தினம்.. கோபன்ஹேகனில் கிளர்ந்த தீப்பொறி.. உலகெங்கும் பரவிய நாள் .. மார்ச் 8

Mar 07, 2025,12:59 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்ச் 8ம் தேதி.. சர்வதேச மகளிர் தினம்.  பெண்களின் பணிக்கு சிறப்பும், பாராட்டும் தெரிவிக்கும் வகையிலும் உலகம் முழுவதும் பெண்கள் அனைத்து துறையிலும் புரியும் சாதனைகளை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


எப்போது இருந்து தொடங்கியது மகளிர் தின கொண்டாட்டம்?




சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் யோசனை கிளாரா ஜெட்கின் என்பவர் 1910இல் கோபன் ஹே கணில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டின் போது,  இந்த 'சர்வதேச மகளிர்' தினத்தை கொண்டாட பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கிளாராவின் யோசனையை  அவருடைய ஆலோசனையை ஆதரித்தனர்.


1911 இல் ஆஸ்திரியா, டென்மார்க் ,ஜெர்மனி, மற்றும் ஸ்விட்சர்லாந்து இல் முதன் முதலில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வதேச மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாள் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 1909 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1975 சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்தது.


இந்த ஆண்டு 2025 சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் அதாவது தீம் என்ன என்று பார்த்தால் 'செயலை துரிதப்படுத்து' ஆங்கிலத்தில் ஆக்ஸிலரேட் ஆக்சன்(Accelerate Action) என்பதாகும். இந்த கருப்பொருள் பெண்கள் சமத்துவத்தை விரைவுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


பெண்களின் முன்னேற்றத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் உத்திகள் வளங்கள் மற்றும் செயல்பாடுகளை அங்கீகரிப்பதற்கும் அவற்றை செயல்படுத்தவும் ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகளாவிய அழைப்பாக 'ஆக்சலேட் ஆக்சன்' 'செயலை துரிதப்படுத்து'(Accelerate Action')இந்த கருப்பொருள் அமைந்துள்ளது.


அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்