- க.யாஸ்மின் சிராஜூதீன்
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்
வாழ்க்கையின் பக்கங்களே
திருப்பிப் பார்த்தால் கடந்து வந்த பாதையே ....
வெற்றிக்கும் தோல்விக்கும்
கடந்து வந்த பாதை வரலாறு பேசுமே ...
அஞ்சி அஞ்சிவாழ்வார்அவனியிலே
மண்ணில் கலந்து கரைவரே.....
வாழ்ந்த காலம்கூட மணல்மேல் சுவடே ...
பாதையை கடக்கத்துணிந்தவனுக்கு ஆயிரம் தடைகள் வழிதனிலே...
தடையை படிக்கல்லாக்கியவனுக்கே
கடந்து வந்த பாதை சிகரம் தொடுமே
வரலாறு படைக்குமே.....

கடினம் என்பார் கண்விழித்து உன் குறைகளைக்காண்பரே ....
உந்தன் பாதையை மறித்து கடக்க
தயக்கம்கொள்ளச் செய்வரே ......
ஊக்கம் அளிப்பவர்கள் உறங்காமல்
நிறைகளைக்காண்பரே ....
உந்தன் பாதையை செம்மையாக்கி
கடக்க உதவி செய்வரே .....
ஒவ்வொரு நாளும் பாதையை கடக்கிறோம்....
பல நிகழ்வுகளை சந்திக்கிறோம்...
முன்னேறிச்செல்லும் பாதையில்
கடந்தவையெல்லாம் கடந்து வந்த பாதைதான்...
காலம்கடந்தால் கடந்து வந்த பாதைதான் ..
காலம் பேசனும் இதுதான் வழிகாட்டும் பாதை என்றுதான் ....
வயது முதிர்வில் அசைபோடனும்
இனிய கடந்துவந்த
பாதையைத்தான்....
வாழும் போதேஇன்பமாய்,துணிவாய் வாழ்ந்தால் கிடைக்கும்தான்....
வெல்லும் முன்னே ஏதோ செல்லும் பாதைதான்...
வென்றபின்னே கடந்து வந்த பாதைதான்....
கடந்த , கடக்கும்,கடக்க இருக்கும்
பாதையை வெற்றிப் பாதையாக்கிடு..
வரலாறு போற்ற வாழ்ந்திடு....!!!
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பாதை உண்டு ...
திரும்பிப் பார்க்க
கடந்து வந்த பாதை உண்டு.....
பிறருக்கு வழிகாட்டும் உறுதியான பாதை அமைத்திடு ...
என்றும் நீங்கா வரலாறு படைத்திடு...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}