சிறிய புன்னகையில் பெரிய உலகம் கொண்டாடும் நாள்!

Nov 14, 2025,01:41 PM IST

- அ. சீ. லாவண்யா


இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


குழந்தை என்றாலே நம் மனதில் தோன்றுவது அவர்களின் முகத்தில் தோன்றும் பொன்னான சிரிப்பு தான்.  இந்த சிரிப்புக்கு  எந்த ஒரு விலைமதிப்பு உள்ள பொருளுக்கும் ஈடாக முடியாது. மன நிம்மதியின் வடிவமே குழந்தைகளே. 


நாம் அனைவரும் வளர்ந்து விட்டோம் உடளவில் தான். ஆனால் நாம் எல்லோரும் மனதளவில்  குழந்தையாக தான் எதோ ஒரு வகையில் இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் சிலர் கூறுவதை கேட்டிருப்போம், குழந்தையாகவே இருந்திருக்கலாமோ என்று? ஏனால் அந்த குழந்தை பருவத்திருக்கு ஈடாக முடியாது இந்த வளரும் பருவத்தை. மனதில் எந்த குழப்பமும், போராட்டமும், நிம்மதியின்மையும் இல்லாத பருவமே அது. ஆனால் இப்போதோ நாம் மனம் விட்டு சிரிப்பதற்குக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கை எனும் பாதையில்.


இக்கால குழந்தைகள் மன அளவில் வலிமை மிக்கவர்களாக திகழ்க்கிறார்கள். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற மனம் இந்த இளம் பருவத்தில் அனைத்து குழந்தையிடமும் வளர்வதை காணலாம். 


குழந்தைகள் இல்லாத வீடு இல்லை. வானில் உள்ள நட்சத்திரம் போல் எல்லா இல்லங்களிலும் குழந்தை நட்சத்திரங்கள் உண்டு. இந்த நட்சத்திரங்களே அந்த வீட்டின் எதிர்கால  சூப்பர் ஸ்டார்கள்.




இக்கால குழந்தைகள் கையில் ஒரு டிஜிட்டல்  உலகம். அந்த டிஜிட்டல் உலகம் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அவர்களின் அறிவையும் வளர்ச்சியையும் நாம்  கெடுப்பதாக நினைக்கிறோம். அளவான நேரத்தில் உபபோயோகமாய் உள்ள செய்திகளையும், உலக நாட்டு நடப்பையும் குழந்தைகளுக்கு நாம் காண்பிக்கலாம். அதுவும் அறிவு சார்ந்த வகையில் இருக்க வேண்டும். குழந்தை கையில் நாம் இப்போது நூல்கள் பார்ப்பதில்லை. டிஜிட்டல் உலகம்  பயன்படுத்தும் அலைபேசி போன்ற சாதனங்கள்தான் அதிகம் புழங்குகின்றன. அதை அளவோடு பயன்படுத்த வேண்டும்.


காலையில் சிரித்து எழும் ஒரு பூ, மாலையில் பள்ளி பைகளை தூக்கி வரும் ஒரு காற்று, சுற்றத்தைக் குளிரச் செய்யும் ஒரு சின்ன வெயில்.காலை பள்ளி செல்லும் நேரத்தில் தடுமாறி ஓடும் குட்டிகளைப் பார்த்தால், அவர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகுகிறார்கள் என்று புரியும். ஒவ்வொரு நாளும் புதுசாக ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆசையும், உலகத்தையே கேள்விக்குள்ளாக்கும் சிந்தனையும் குழந்தைகளிடம் மட்டுமே இருக்கும் தனி சொத்து.


குழந்தைகள் தினம் என்பது அடிக்கடி நாம் மறந்து விடும் ஒரு உண்மையை நினைவூட்டுகிறது: குழந்தைகள் மட்டும் அல்ல; குழந்தைத்தனம் தான் வாழ்க்கையின் அழகு.


அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய-ஆர்வம், நம்பிக்கை, முயற்சி, பாசம், சிரிப்பு... இவை எல்லாம் இருந்தால் உலகமே வண்ணமயமாகி விடும்.


நம் எதிர்காலத்தின் நட்சத்திரங்களிடம் கனவு காணுங்கள் வாழக்கையில் மின்னுங்கள் வானில் உள்ள விண்மீங்கள் போல என்று கூறுவோம். 


குழந்தைகள் செய்கையில் தவறு இருந்தாலும், சிரிப்பு மட்டும் சரியான கோணத்தில் வரும்; அவர்களுடைய நகைச்சுவை உலகத்துக்கே ஒரு Happy Vitamin தரும்!


குழந்தைகள் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல-அவர்களின் கனவுகளை காக்கும் நம் பொறுப்பை நினைவூட்டும் முக்கியமான நாளும் ஆகும். குழந்தைகள் பாதுகாப்பாக, சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வளரக்கூடிய சூழலை நாம் உருவாக்கும் போது தான் ஒரு சமூகமும் ஒரு நாடும் உண்மையில் வளர்கிறது.


ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும்-ஒரு புதிய உலகத்தின் விதை. குழந்தையின் சிரிப்பே நாட்டின் மகிழ்ச்சி


(அ. சீ. லாவண்யா திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?

news

சீனாவின் மகா மதில்.. உலக அதிசயங்கள் (தொடர்)

news

முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!

news

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு

news

நீ பார்த்த பார்வை.. When I looked into your eyes!

news

ஒரே நாளில் உருவானதல்ல.. ரோம சாம்ராஜ்ஜியம்.. ROME WASN'T BUILT IN A DAY

அதிகம் பார்க்கும் செய்திகள்