"ஓடிடி"யால் பொழப்பு போச்சு.. தியேட்டர்களை மூடப் போகிறோம்.. உரிமையாளர்கள் திடீர் எச்சரிக்கை!

Feb 20, 2024,03:37 PM IST

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாகவும், அரசு ஒத்துழைப்பு தராவிட்டால் தியேட்டர்களை மூட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள்.


தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. 




இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கவும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் தியேட்டர்களை மூடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியுள்ளதாவது:


- ஓடிடியில் படம் வெளியாகி 8 வாரம் கழித்து தான் வெளியிட வேண்டும். தற்போது 2 வாரங்களிலேயே படம் வெளயாகி விடுவதால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.




- உள்ளூர் பொழுதுபோக்கு 8% வரியை நீக்க வேண்டும். இந்த வரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை.


- திரையரங்க பராமரிப்பு கட்டணத்தை (maintenance) உயர்த்த வேண்டும். ஏ சி தியேட்டர் ரூ. 10, non AC தியேட்டர் ரூ. 5 என நிர்ணயம் செய்ய வேண்டும். 


-  திரைப்படங்களுக்காண share தொகைத் தற்போது அதிகமாக உள்ளது. எனவே வரும் 1ம் தேதிக்கு மேல் 60% சதவீதம் அதிகமாக கொடுப்பதில்லை என முடிவெடுத்து உள்ளோம். 




- கிரிக்கெட் உள்ளிட்ட  விளையாட்டு போட்டிகளையும் திரையிட அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.  விரைவில் தமிழ்நாட்டிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.


இப்படித்தான் கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஓடிடி வெளியீட்டுக் காலத்தை அதிகரிக்காவிட்டால் கேரளாவில் மலையாளப் படங்களை திரையிட மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்