இன்று நினைத்ததை நிறைவேற்றும் தை மாத தேய்பிறை அஷ்டமி

Feb 09, 2026,03:04 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாசு வருடம் 20 26 பிப்ரவரி 9 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று தை மாதம் 26ஆம் நாள் அஷ்டமி திதி அமைந்துள்ளது.

 இந்த நாள் கால பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும்.  எட்டாவது திதியாக வரும் அஷ்டமி அன்று பைரவரை வழிபட எதிர்மறை எண்ணங்கள் தேய்ந்து நேர்மறை எண்ணங்கள் வளரும். மேலும் செல்வ வளம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், எதிரிகள் தொல்லை, மனதில் உள்ள பயம் நீங்கி, கிரகங்களால் ஏற்படும் தடைகள் நீங்கும். தீய சக்திகள் அண்டாது.


 இன்று அமைந்துள்ள தேய்பிறை அஷ்டமி நாள் சிவ வழிபாட்டிற்குரிய நாளான திங்கட்கிழமையில் இருப்பதும், முருகப்பெருமானுக்குரிய விசாகம் நட்சத்திரத்தில் அமைந்திருப்பதும் மேலும் விசேஷமானது.


 நேரம்:




 அஷ்டமி திதி 09.02.2026 திங்கட்கிழமை காலை07:06 மணி முதல்10.02.2026 செவ்வாய்க்கிழமை காலை08:46 மணி வரை உள்ளது.

 மேலும் மதியம் 12 :00 மணி அளவில் நடைபெறும் உச்சிக்கால பூஜையில் காலபைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

 

 பலன்கள்:

கடன் தொல்லைகள் இருந்தால் அதிலிருந்து மீண்டு  வரவும், வேலை வாய்ப்புகள் கிடைக்கவும், திருமண தடை உள்ளவர்களுக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்வதனால் வாழ்வில் வளம் பெறலாம். தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து பைரவர் நம்மை காப்பார் என்பது ஐதீகம். இந்த நாள் பைரவர் வழிபாடு செய்து, அன்னதானம் செய்து வர வாழ்வில் செல்வம் பெருகும்.குடும்பத்தில் அமைதி,மகிழ்ச்சி, மன நிம்மதி, செழிப்பு ஏற்பட மிகவும் முக்கியமானதும், எளிமையானதும்  தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஆகும்.


 வழிபாடு:

 சிவபெருமானின் அம்சமான பைரவரை வழிபட  சிவன் ஆலயங்களுக்கு இன்று மாலை செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள், செவ்வரளி மலர்கள், வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.


 தேய்பிறை அஷ்டமி அன்று செய்யக்கூடாதவை.

 தேய்பிறை அஷ்டமியில் அசைவ உணவு உண்பதை தவிர்க்கவும்.புது மனை புகுதல், புது வீடு வாங்குதல், புதிய நிலம் வாங்க ஒப்பந்தம் செய்தல், திருமணம் போன்ற சுப காரியங்கள் தேய்பிறை அஷ்டமியில் செய்வதை தவிர்க்கவும்.யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல், பொய் கூறாமல், தீய எண்ணங்கள் மனதில் வைத்திராமல்  இருப்பது நல்லது.


 முழு நம்பிக்கையுடன் பக்தியுடன் காலபைரவரை வழிபட தொழில்,வியாபார வழியில் ஏற்படும் முடக்கம், எதிரிகள் தொல்லை நீங்கும். ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். காலபைரவர் பூஜைகளில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்வதனால் சனி மற்றும் ராகு போன்ற கிரகங்களின் நன்மை கிடைத்து, வாழ்வில் தடைகள் நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. பைரவர் சிவபெருமானின் உக்கிரமான வடிவமாகவும், காலத்தை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவராகவும் போற்றப்படுகிறார். அவர் பக்தர்களின்  துன்பம் துடைத்து, நன்மை பெற இன்று காலபைரவர் வழிபாடு செய்து அனைவரும் நல்வாழ்வு பெறுவோமாக.


 மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

ஓட்டல் ஊழியர்களை தாக்கிய விவகாரம்: தலைமை காவலர் மோகன் குமார் சஸ்பெண்ட்!

news

பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு

news

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

news

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்