சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் நடிகை சோனாவிடம் மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்ற நடிகை சோனா ஹைடன் கோலிவுட்டில் குத்தாட்ட பாடல்கள் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான குசேலன் படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடியிலும் கலக்கியிருந்தார். தொடர்ந்து ஷாஜகான், ஜித்தன், மிருகம்,உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் யூனிக் ஆடை விற்பனை கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.
சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் நடிகை சோனா. இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு நடிகை சோனா வளர்க்கும் நாய் மர்ம நபர்களை பார்த்தும் உடனே குறைக்க ஆரம்பித்துள்ளது. நாய் குறைக்கும் சத்தத்தை கேட்ட சோனா வெளியே வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவரைப் பார்த்ததும் மர்ம நபர்கள் இருவர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது, சோனா சத்தமிட ஆரம்பித்தார். இதனால் மர்ம நபர்கள் சோனாவிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
திடீரென கத்தியைக் காட்டியதும் பயந்து போன சோனா மயக்கமாகி விழுந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பித்து ஓடி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடிகை சோனா மதுரவாயில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோனாவின் வீட்டை சோதனையிட்டனர். அங்கு வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டின் வெளியே பொருத்தியிருந்த ஏசி யூனிட்டை திருட முயன்ற மர்ம கும்பலைச் சேர்ந்த இருவர்தான் சோனாவை கத்திய காட்டி மிரட்டி தப்பித்து ஓடியது தெரியவந்தது. இதனை அடுத்து திருட முயன்ற அந்த மர்ம கும்பல் யார் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையிலும் இறங்கி உள்ளனர்.
நடு ராத்திரியில் சோனா வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றதோடு, அவரையும் கத்தியைக் காட்டி பயமுறுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}