திருநெல்வேலி: புகழ் பெற்ற, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் தமிழகத்தில் உள்ள சிறப்பு மிக்க கோவில் தலங்களில் ஒன்றாகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும், ஆனி மாசம் நடைபெறும் ஆனித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வாண்டிற்கான திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், காலை மற்றும் இரவில் சுவாமி- அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியில் காலை 8 மணிக்கு சுவாமி நடராச பெருமாள் வீதியுலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலாவும், சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரேட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்ட நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்த தோரோட்டத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இவ்விழாவில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 147 கண்காணிப்பு கேமராக்கள் கோவிலின் உட்புறமும் வெளிபுறமும் பொறுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவ குழு, நடமாடும் கழிப்பறைகள் என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
500 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் மிகப் பழமையான தேரோட்ட வைபவங்களில் நெல்லையப்பர் கோவில் தேரோட்டமும் முதன்மையானது என்பது நினைவிருக்கலாம்.
புகைப்படங்கள்: காயத்ரி கிருஷாந்த்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}