சென்னை : ஒரு வீட்டின் மிக முக்கியமான இடங்களில் ஒன்று பூஜை அறை. நம்முடைய வீட்டில் தெய்வீக சக்திகள், நேர்மறை ஆற்றல்கள் ஆகியவை குடிகொள்ள காரணமாக இருக்கும் இடம் பூஜை அறை தான். வாஸ்து சாஸ்திர முறைப்படி, நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களை அதற்குரிய திசை மற்றும் முறையில் வைப்பதால் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும். அப்படி பூஜை அறையில் எந்த பொருளை வைத்தால் வாழ்க்கையே மாறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம் வீட்டின் பூஜை அறையில் சாமி படங்கள், விக்கிரகங்கள், குலதெய்வ படங்கள், பூஜைக்கு தேவைப்படும் பொருட்கள், விளக்கு உள்ளிட்ட பல பொருட்களை வைத்திருப்போம். ஆனால் இப்படி நாம் வைக்கும் அனைத்து பொருட்களிலும் தெய்வீக சக்தி வந்து குடி கொள்வது கிடையாது. அப்படி தெய்வம் நம்முடைய வீட்டில் குடிகொள்ள வேண்டும், தெய்வீக அருள் நம்முடைய வீட்டிலும் வாழ்விலும் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால், தெய்வீக சக்தியை ஈர்க்கும் தன்மை கொண்ட பொருட்களை வைப்பது மிக அவசியம்.
கண்டிப்பாக வைக்க வேண்டிய பொருட்கள்

பூஜை அறையில் இறந்தவர்களின் படங்கள், காய்ந்த பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வைக்கக் கூடாது என்ற முறை உள்ளது. அதே போல் பூஜை அறையில் கண்டிப்பாக வைக்க வேண்டிய பொருட்கள் என்றும் சில உள்ளன. அவற்றில் ஒன்று தான் கண்ணாடி. முகம் பார்க்கும் கண்ணாடியை உங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் உங்கள் வாழ்க்கையே மாறும்.
கண்ணாடி என்பது மிக முக்கியமான மங்கல பொருட்களில் ஒன்றாகும். செல்வத்திற்கு அதிகபதியான மகாலட்சுமி 108 பொருட்களில் விரும்பி வந்து குடியிருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. கண்ணாடி, மகாலட்சுமிக்கு மிக விருப்பமான பொருளாகும். உங்கள் பூஜை அறையில் சிறியதோ, பெரியதோ ஒரு கண்ணாடியை வாங்கி அதை கிழக்கு புறமாக பார்த்து வைக்க வேண்டும். இதனால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
உதாரணமாக, கண்ணாடியை கிழக்கு புறமாக பார்க்கும்படி வைத்தால் கடவுளின் பரிபூரண அருள் கிடைக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறையான விஷயங்கள் நடக்கும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் நம் முன்னோர்கள் மற்றும் நம் குலதெய்வம் அதில் பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது. இதனால் தெய்வ அருள் மட்டும் இன்றி நம் முன்னோர்களின் ஆசியும் முழுமையாக கிடைக்கும். அவரவர் வசதிக்கேற்ப கண்ணாடியை வைத்து வழிபாடு செய்யுங்கள். பல நல்ல மாற்றங்கள் நம் வாழ்வில் நிகழும்.
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
எண் 6க்கும், அப்பன் ஆறுமுகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!
{{comments.comment}}