கோயம்புத்தூர்: பிரதமர் நரேந்திர மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தமாகா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த நடைப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரமாண்ட நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மோடி அவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் திரளாக என்னை வரவேற்றார்கள். ஆயிரக்கணக்கான தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்களோடு இணைந்து இன்றைக்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருங்கால இந்தியா மிக உயர்ந்த இந்தியாவாக, மதிப்பிற்குரிய இந்தியாவாக, வளமான இந்தியாவாக, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையிலே அமையும். அத்தகைய உயர்ந்த நிலைக்கு 10 வருட கால மத்திய அரசினுடைய பிரதமர் மோடி தலைமையிலான மக்கள் பணிகள், மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்கு பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் இந்த முறை உறுதியாக ஏற்படுத்துவார்கள் என நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு எங்களது களப்பணி அமையும் என்று கூறினார்.
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}