உடம்பில் ஒட்டுத் துணி இல்லை.. முழு நிர்வாணமாக.. இமயமலையில் சுற்றித் திரிந்த "துப்பாக்கி" நடிகர்!

Dec 10, 2023,05:48 PM IST

மும்பை: முழு நிர்வாண கோலத்தில் இமயமலைப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார் பிரபல இந்தி வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.


இமயமலைக்குப் போவது பலரின் வழக்கமாக உள்ளது. உலகக் கவலைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு சற்று நிம்மதியாக இருப்பதற்காக பலரும் அங்கு போகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அடிக்கடி இமயமலைக்குச் செல்வது வழக்கம்.


இந்த நிலையில் இன்னும் ஒரு நடிகர் அடிக்கடி இமயமலைக்குப் போவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்தான் வித்யுத் ஜம்வால். பிரபல நடிகரான இவர் தமிழில் துப்பாக்கி படத்தில் நடித்து அறிமுகமானவர். அதில் தீவிரவாதிகளின் தலைவனாக நடித்திருப்பார் வித்யுத் ஜம்வால். தொடர்ந்து சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் இமயமலையில் கிட்டத்தட் ஒரு வார காலம் நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்துள்ளார் வித்யுத் ஜம்வால். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட் வைரலாகியுள்ளது. நிர்வாண கோலத்தில் தான் இருக்கும் புகைப்படங்களையும் வித்யுத் வெளியிட்டுள்ளார். 




இதுதொடர்பாக அவர் கூறுகையில், 


இமயமலையில் எனது ஆத்ம உலா. 14 வருடங்களுக்கு முன்பு இது ஆரம்பித்தது. இதை ஒவ்வொரு ஆண்டும் நான் 7 முதல் 10 நாட்களுக்கு மேற்கொண்டு வருகிறேன்.  எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இது மாறி விட்டது.


சொகுசான வாழ்க்கையிலிருந்து இயற்கையான இந்த வாழ்க்கைக்கு வருவது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. நாம் யார் என்பதை நம்மை உணர வைக்கிறது.  தனிமையில் என்னை நானே உணர முடிகிறது. நாம் யார் என்பதை உணர்வதற்கு முன்பு நாம் யார் இல்லை என்பதை உணர வேண்டும். அதை இந்த பயணம் எனக்கு உணர்த்தும்.  இயற்கை தந்த இந்த அருமையான சொர்க்கத்தை அனுபவிக்க இது வாய்ப்பு தருகிறது.


இங்கு வருவது எனக்கு சக்தியைக் கூட்ட உதவுகிறது. இங்கு கிடைக்கும் சக்தியும் வலிமையும் நான் வீடு திரும்பிய பின்னர் எனக்குப் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்து ஓட உதவுகிறது. புதிதாக பிறந்தது போல உணர வைக்கிறது. 


எனது அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கவுள்ளது.. அதற்கு நான் தயாராக விட்டேன். எனது கிராக் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திரைக்கு வருகிறது.. நான் மட்டுமல்ல நீங்களும் கண்டு களிக்கத் தயாராகுங்கள்  என்று கூறியுள்ளார் வித்யுத் ஜம்வால்.


அவரது புகைப்படங்களை உள்ளூர்க்காரரான  மொஹர் சிங் என்ற கால்நடை மேய்ப்பாளர் எடுத்துள்ளாராம்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை

news

ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்