சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இப்படம் நாளை அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது. ஜெய்பீம் படத்தின் மூலம் கவனத்த ஈர்த்த இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அமிாசப் பச்சன், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அப்போது ரஜினிகாந்த் குட்டி கதை சொல்லி கலக்கினார். இப்படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால், நாளை ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் நடைபெற தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நாளை காலை 9மணி முதல் இரவு 2 மணி வரை படத்தை திரையிட்டுக் கொள்ளலாம்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் ரஜினியின் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. அதிலும் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தை பார்ப்பதற்கு hysas என்ற நிறுவனம் டிக்கெட்டுடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் இருக்கிறதாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}