சென்னை: தங்கம் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தங்கம் வெள்ளி சந்தையில் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் விலை குறைந்துள்ளது. இந்த தொடர் விலைக் குறைவு நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் வரை தங்கம் விலை இதே விலையில் தான் நீடிக்கும். குறிப்பாக அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் தங்கம் விலை குறையும். அங்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் தங்கம் விலை கூடுவதும் குறைவதும் அமெரிக்காவின் கையில் தான் உள்ளது. இன்று நகை விலை எவ்வளவு என்பதை பார்ப்போமா?

சென்னையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,650 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.80 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,200 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,255 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,040 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை
நேற்று குறைந்திருந்த வெள்ளி இன்றும் குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.20 காசுகள் குறைந்து ரூ.95க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 760 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலைரூ.95,200 இருந்த விலை இன்று ரூ.95,000க்கு விற்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}