அடடே.. தங்கம் விலை இன்னிக்கு கம்மி ஆயிருச்சு.. என்ன கடைக்குக் கிளம்பலாமா!

Jan 03, 2024,01:37 PM IST

சென்னை: சென்னையில் நேற்று அதிகரித்து இருந்த தங்கம் விலை இன்று  குறைந்துள்ளது. இன்று  சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. பண்டிகை காலங்களில் தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர். நேற்று சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து இருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை அடுத்து வரவிருக்கிறது. எனவே மக்கள் நகை, பொருட்கள், துணிமணிகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நகை கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




இன்றைய விலை


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5915 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 47320 ரூபாயக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6453 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைவாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.51624 ஆக உள்ளது.


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் குறைந்து ரூபாய்  80 ஆக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 640  ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

news

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

news

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

news

சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!

news

நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

அதிகம் பார்க்கும் செய்திகள்