தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 03 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆனி 19ம் தேதி வியாழக்கிழமை
வளர்பிறை அஷ்டமி .மாலை 04.32 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 04.33 வரை அஸ்தம் நட்சத்திரமும், அதன் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.57 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
மேஷம் - உங்களுக்கு பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், தொழிலில் நல்ல வருமானம் வரும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். மாமியாரின் உடல் நலம் தேறும்.
ரிஷபம் - எதிர்கால தேவைக்கு கொஞ்சம் பணம் சேமிப்பீர்கள். கணவர் வழி உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். தம்பதிகளிடம் அன்பு பெருகும். இருவரும் சேர்ந்து முடிவெடுப்பீர்கள்.
மிதுனம் - பெற்றோர்கள் உங்கள் வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படுவார்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். குடும்பத் தலைவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் உதவுவார்கள். பணப்பற்றாக்குறை இருக்காது. திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல துணை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம் - வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க போராடுவீர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பணம் வரவு தாமதமாகும். வேலையில் பளு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.
சிம்மம் - இன்று நினைத்ததை முடித்து சந்தோஷம் அடைவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் மனஸ்தாபம் வரலாம். கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். குடும்பத் தலைவிகளுக்கு கை, கால் மூட்டுகளில் வலி வரலாம். நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
கன்னி - தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் வந்தால் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற முயற்சி செய்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அரசியலில் நல்ல பொறுப்பு கிடைக்கும்.
துலாம் - வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். பணப்புழக்கம் இருக்கும். அதில் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குங்கள். உறவினர்கள் வந்து போவார்கள். புதுமண தம்பதிகளிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். விட்டுக் கொடுத்து போவது நல்லது.
விருச்சிகம் - விரும்பிய வரணை கைப்பிடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளியூர் செல்வீர்கள்.
தனுசு - எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். தாயார் வீட்டிற்கு சென்று உதவி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மகரம் - வேலையில் உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாகன கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
கும்பம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை பிரார்த்தனை செய்வது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பம் ஏற்படும். கவனம் தேவை.
மீனம் - திருமணம் மற்றும் கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு வரும். தம்பதிகளிடையே வாக்குவாதம் வந்து போகும். பொறுமையாக இருங்கள். கடன் சுமையை எண்ணி கவலைப்பட வேண்டாம். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். அதில் ஒரு பகுதியை விற்று கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}