தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 03 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஐப்பசி 17 ம் தேதி திங்கட்கிழமை
சோமவார பிரதோஷம். சுப முகூர்த்த நாள். இன்று அதிகாலை 01.43 வரை துவாதசி திதியும், பிறகு இரவு 11.49 வரை திரியோதமி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. பகல் 01.02 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - மகம், பூரம்

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். தம்பதிகள் திட்டமிட்டு செயல்படுவார்கள். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பழைய கடன்களை அடைக்க புதிய வழிகள் பிறக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் வாகனத்தை மாற்றுவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தொலைதூர புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவார்கள். நீண்ட நாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த வழக்குகள் சாதகமாகும். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடம் பிடிப்பார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, பெண்கள் சுய தொழில் தொடங்குவார்கள். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். காதலர்கள் எந்த முடிவையும் பெற்றோரிடம் கலந்தாலோசிக்காமல் எடுக்க வேண்டாம். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் இளம்பச்சை.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, சொந்த பிளாட், நிலம் வாங்கும் ஆசை விரைவில் நிறைவேறும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பார்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு, பதவி உயர்வு தாமதமாகக் கிடைத்தாலும் வந்து சேரும். பணப் பற்றாக்குறை நீங்கும். நெருடலான, தர்மசங்கடமான சூழ்நிலைகள் இனி மறையும். கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களின் தேகம் பளிச்சிடும். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவார்கள். அலுவலகத்தில் விடுபட்ட, நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் சீராக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும். தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறம்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு, புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். பயணங்களின் போது கவனம் தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வெகு நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை யோகம் உண்டாகும். உத்தியோகம் சாதகமாக இருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் இறுதியில் லாபம் ஈட்டுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வங்கி கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கௌரவப் பதவி தேடி வரும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயம் அடைவார்கள். பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்
தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல்
"ஹலோ.. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா".. From Shared Telephones to Endless Updates!
பரமபதம் விளையாட்டு.. முன்னோர்கள் வகுத்து வந்த அபாரமான விளையாட்டு!
Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
நான் வெறும் உடன்பிறப்பு மட்டுமல்ல—.. If I stand strong today!
{{comments.comment}}