12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 04, 2025,10:13 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 04 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 20 ம் தேதி செவ்வாய்கிழமை

பஞ்சமி.  இரவு 08.14 வரை பஞ்சமி, பிறகு சஷ்டி திதி உள்ளது . காலை 08.57 வரை அஸ்வினி  நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 08.30 முதல் 9 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  உத்திரம், அஸ்தம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும். எந்த செயலிலும் திருப்தியின்றி காணப்படுவீர்கள். எதையும் யோசித்து செய்ய வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.


ரிஷபம் - எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில் முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. 


மிதுனம் - கலை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சேமிப்பு விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். செயல்பாடுகளில் புத்திகூர்மை வெளிப்படும். பூர்வீக சொத்துக்களால் சேமிப்பு அதிகரிக்கும். 


கடகம் -  வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்காலம் தொடர்பாக சில திட்டங்கள் வகுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புது விதமான இலக்குகள் பிறக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். 


சிம்மம் - எதிர்பாராத சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வீர்கள். நேர்மைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான சூழல்கள் உருவாகும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். 


கன்னி -  பணியில் சில குழப்பங்கள் ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லவும். எதிலும் கோபத்தை குறைத்து, பொறுமையுடன் செயல்பட வேண்டும். தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது. செயல்களில் ஆர்வம் இன்றி காணப்படுவீர்கள். விவேகம் நிறைந்த நாளாக இருக்கும். 


துலாம் - கணவன்-மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு நிகழும்.


விருச்சிகம் - மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 


தனுசு - பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். 


மகரம் -  உத்தியாகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாளாக இருக்கும்.


கும்பம் -   முயற்சிகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தெளிவு பிறக்கும்.  


மீனம் - மனதில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். பயணங்களால் இன்பமான அனுபவம் ஏற்படும். அடமான பொருட்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். பண வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையம் தொடர்பான துறைகளில் ஏற்றம் உண்டாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்