12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 10, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Dec 10, 2024,10:17 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், கார்த்திகை 25 ம் தேதி செவ்வாய்கிழமை

இன்று அதிகாலை 03.32 வரை நவமி, அதற்கு பிறகு தசமி. காலை 11.34 வரை உத்திரட்டாதி, பிறகு ரேவதி. காலை 06.17 வரை சித்தயோகம், பிறகு காலை 11.34 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.


நல்ல நேரம்: காலை - 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை 


சந்திராஷ்டமம் - மகம், பூரம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - எதிலும் நேர்மையுடன் நடந்து கொள்வது சிறப்பு. எதையும் தைரியமாக எதிர்கொண்வு வெற்றி அடைவீர்கள். எதிர்காலத்திற்கான செலவுகளை திட்டமிடுவீர்கள். வாழ்க்கை துணையிடம் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும்.


ரிஷபம் - காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் சிந்தித்து, கவனமுடன் செயல்படுவது சிறப்பு. ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட வேண்டிய நாள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.


மிதுனம் - தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏற்படும். எதையும் கனிவான பேச்சுகள் மூலம் சாதிக்க வேண்டிய நாள். பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். நோய்களால் பெரிய அளவு தொந்தரவு ஏற்படாது. 


கடகம் - உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதையும் ஒருமுறை இருமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். குடும்பத்திலும், அலுவலகத்திலும் மற்றவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வார்த்தைகளை கவனித்து பேசுங்கள்.


சிம்மம் - உடல் சார்ந்த பிரச்சனைகளில் அலட்சியம் வேண்டாம். வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தொழிலில் கவனம் தேவை. உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.


கன்னி - புதிய தெம்புடன் செயல்பட்டு நன்மைகளை அடைவீர்கள். தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்குள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். முதலீடுகளில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள்.


துலாம் - ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.


விருச்சிகம் - வாழ்க்கை துணை உடனான புரிதலும், அன்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வேலைகளால் அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


தனுசு - வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்களின் தலைமை பண்பு மற்றவர்களால் பாராட்டப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.


மகரம் - மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த முயல்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.


கும்பம் - வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தேடி வரும். நன்மைகள் அதிகம் உங்களை தேடி வரும். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. எதையும் பொறுமை, புன்னகையுடன் எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.


மீனம் - உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் அமைதியாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். தொழிலில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

உயிரின் உறவு அம்மா!

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

விடாமுயற்சி நாயகன் விநாயகன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்