தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், ஆவணி 27ம் தேதி வெள்ளிக்கிழமை
மகாபரணி. கிருத்திகை. பகல் 02.01 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இன்று மாலை 04.30 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை
இன்றைய ராசிபலன் :

மேஷம் - மேஷம் ராசிக்காரர்களுக்குப் பிள்ளைகள் தொடர்பாக கவலைகள் இருக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்கள் தள்ளிப் போகும். ஆனால், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவார்கள். அதற்கான வேலைகளை அன்றே ஆரம்பிப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுப காரியங்கள் நடைபெறும். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களில் லாபம் உண்டு. வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். தம்பதிகளிடையே அன்பு பெருகும். பெண்கள் தங்கள் தோழிகளிடம் மனம் விட்டு பேச நேரம் கிடைக்கும். உடல்நலம் மேம்படும்.
மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பண வரவு இனி அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். தேகம் பளிச்சிடும்.
கடகம் - கடகம் ராசிக்காரர்களுக்கு வேலை தொடர்பான வெற்றி உண்டு. புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் பலிக்கும். உத்யோகம் சாதகமாக இருக்கும்.
சிம்மம் - சிம்மம் ராசிக்காரர்களுக்கு நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
கன்னி - கன்னி ராசிக்காரர்கள் அஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் மற்றும் சங்கடங்கள் தோன்றலாம். மிகவும் கவனம் தேவை. இறைவனை வழிபட்டு காரியத்தை துவங்கவும். அன்று காரிய தடைகள் ஏற்படும். காரணம் சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும்.
விருச்சிகம் - விருச்சிகம் ராசிக்காரர்கள் குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். ஒரு சிலருக்கு புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். விற்க முடியாத காலி மனையை தேடி வாடிக்கையாளர்கள் வருவர். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும். மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும்.
மகரம் - மகரம் ராசிக்காரர்கள் வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். புரமோஷன், டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உள்ளது. புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது.
கும்பம் - கும்பம் ராசிக்காரர்களுக்கு புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.
மீனம் - மீனம் ராசிக்காரர்கள் அக்கம் பக்கத்தினர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}