தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 14 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆனி 30ம் தேதி திங்கட்கிழமை
சங்கடஹர சதுர்த்தி. சுப முகூர்த்த நாள். அதிகாலை 01.50 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 07.58 வரை அவிட்டம் நட்சத்திரமும், அதன் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.59 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்
மேஷம் - இன்று பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் போக்கிலேயே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவையுங்கள். தம்பதிகள் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
ரிஷபம் - பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். பயணங்களின் போது கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்களால் உங்களது தொழிலுக்கு உதவிபுரிவர். வீட்டைப் பற்றியும் கவனத்தில் கொள்வது நல்லது.
மிதுனம் - நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதியவர்களின் நட்பு பலக்கும். வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம்.
கடகம் - உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் பேசும் சாதாரண வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தரலாம். எனவே கவனம் தேவை.
சிம்மம் - மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு இலக்குகள் எட்டிவிடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கதவை தட்டும். கமிஷன் மற்றும் இரும்பு தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் தேவை. பொறுமை அவசியம்.
கன்னி - வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருள்களை வாங்குவர். பல வருடங்களாக பிள்ளைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பார்த்த ஒரு தொகை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும்.
துலாம் - மாமியார் தொல்லை அகலும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். மளிகைக் கடை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய உத்யோகம் கிடைக்கும்.
விருச்சிகம் - பிரபலமானவர்களால் உதவி உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெண்களுக்கு கை, கால் வலி குறையும். ஆன்லைன் மற்றும் பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். தம்பதிகளிடையே அன்பு பலமாகும். உடல் நலம் சிறக்கும்.
தனுசு - தம்பதிகள் அன்பின் திளைப்பர். பணம் பல வழிகளில் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.
மகரம் - மார்க்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அலுவலக வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். வங்கிப் பணியாளர்கள் நிம்மதியடைவர். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களின் பக்கபலம் உண்டு.
கும்பம் - மளிகை வியாபாரிகளுக்கு அதிகமான லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். உங்கள் மகளின் சுபகாரியம் சம்பந்தமாக வெளியூருக்குச் சென்று ஆடை, அணிமணிகள் வாங்கி வருவீர்கள். உடற்பயிற்சி அவசியம் என உணர்வீர்கள்.
மீனம் - கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். சம்பளம் கூடும். ஏழரை சனி நடந்தாலும் பண வரவுக்கு குறைவில்லை. பழைய நண்பரை சந்திப்பீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். உடல் நலம் தேறும்.
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
சங்கடஹர சதுர்த்தி.. விநாயகப் பெருமானை வழிபட கஷ்டங்கள் யாவும் அறுபட்டுப் போகும்!
தொடர்ந்து 4வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்வு... இன்றைய விலை நிலவரம் இதோ!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
{{comments.comment}}