12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 15, 2025... இன்று பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Jul 15, 2025,10:18 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 15 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 31ம் தேதி செவ்வாய்கிழமை

அதிகாலை 12.30 வரை சதுர்த்தி திதியும் பிறகு இரவு 10.47 வரை பஞ்சமி அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 07.17 வரை சதயம் நட்சத்திரமும், அதன் பிறகு பூரட்டாதி  நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  பூசம், ஆயில்யம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் சாதனை புரிவர். குல தெய்வ கோவில் செல்வீர்கள். நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும். 


ரிஷபம் - தொலைந்து போன பொருள் கிடைக்கும். தம்பதிகளிடையே இணக்கம் அதிகரிக்கும். தங்கள் விடாமுயற்சியால் முக்கியமான ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சலுகை கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும்.


மிதுனம் - திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. உடல் நலம் சிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும்.


கடகம் - உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். விரைவில் தங்கள் படம் வெளியாகும். 


சிம்மம் - மகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. 


கன்னி - எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். பெண்கள் செலவினை சமாளிப்பர். தேகம் பலம்பெறும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். கணவன் மனைவி ஒற்றுமை காப்பர். பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும்.


துலாம் -   வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும். புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.


விருச்சிகம் - கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். பணம் பாக்கெட்டை நிரப்பும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். தேகம் மின்னும். உறவினர்கள் வருகை உண்டு. அவர்களால் நன்மை உண்டு. 


தனுசு -  கடன் தொல்லை தீரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சித் தங்கும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை தேகம் புதுப்பொலிவுடன் காணப்படும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள்.


மகரம் - நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள். அவர்களாகவே தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். குடும்பப் பிரச்சினை தீரும். தம்பதிகளின் அன்பு பலப்படும். எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். 


கும்பம் -  நண்பர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உடன் பிறந்தவர்கள் உதவுவர். செலவு கூடும். சிக்கனம் தேவை. புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.


மீனம் - உத்யோகம் லாபகரமாக செல்லும். இன்று குடும்பத்துடன் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். காய்கறி ஷாப்பிங் செய்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும். தங்கள் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்களை மனதிற்குள் அசைபோடுவீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்