தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 17 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆடி 01ம் தேதி வியாழக்கிழமை
தேய்பிறை அஷ்டமி. மாலை 06.33 வரை சப்தமி திதியும் பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 04.48 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், அதன் பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.48 வரை சித்தயோகமும், பிறகு காலை 05.59 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - மகம், பூரம்
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். அலுவலக விஷயமாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. நண்பர்கள் உதவி செய்வார்கள். உடல்நலம் தேறும். வேலையில் உயர் அதிகாரிகள் மதிப்பார்கள்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரம் நன்றாக நடக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். முகம் பொலிவு பெறும்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் பிடித்த நபரை சந்திப்பீர்கள். மருத்துவர்களுக்கு நல்ல நேரம். தொலைபேசி மூலம் நட்பு அதிகரிக்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சின்ன சண்டை வந்து போகும். சுற்றுலா செல்ல திட்டம் போடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனையை தள்ளிப் போடுவீர்கள். புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம் - கடக ராசிக்காரர்கள் ஆன்லைன் வியாபாரத்தை டெவலப் செய்வீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வந்து போகும். விட்டுக்கொடுத்து போவது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். இளைஞர்கள் காதலில் கவனமாக இருக்கவும். குடும்ப கடமைகளை முடிப்பது நல்லது.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான நபர்களை சந்திக்க வேண்டாம். ஏனென்றால் இன்று உங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளது. நல்ல காரியங்களை தள்ளி வையுங்கள். இன்று கடவுளை வழிபடுவது நல்லது.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தடைபட்ட வேலைகள் இன்று முடியும். உறவினர்களால் நன்மை உண்டாகும். வழக்கறிஞர்களுக்கு நல்ல நேரம். நண்பர்கள் உதவி செய்வார்கள். முகம் புது பொலிவுடன் இருக்கும்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களின் பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் வந்து போகும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும். காய்கறி வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். சாப்பாட்டில் கவனம் தேவை. அமைதியாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையில் அமைதியான சூழ்நிலை இருக்கும். நண்பர்களிடம் சண்டை போட வேண்டாம். பேசாதவர்கள் மீண்டும் பேசுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உடல் ஆரோக்கியம் சரியாகும். பணம் வருவது தாமதமாகும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நடக்கும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. பெண்களுக்கு நல்ல செய்தி வரும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காதலர்கள் பொறுப்புடன் இருப்பார்கள்.
மகரம் - மகர ராசிக்காரர்களின் பெற்றோர்களின் உடல்நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமையாக இருங்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களுடன் ஜாலியாக இருப்பீர்கள். வேலைகள் தள்ளிப் போகும். காதல் வரும். உறவினர்கள் வருவார்கள்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு சுப காரியங்கள் தாமதமாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். கடன் பிரச்சினை தீரும். வேலையில் சலுகை கிடைக்கும். இணையதளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். உடன்பிறந்தவர்களால் நன்மை அடைவீர்கள்.
மீனம் - மீன ராசிக்காரர்களின் எதிரிகள் தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பார்கள். சேமிப்பு அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
வயிறு உப்புசமா இருக்கா?.. இதுக்கு இந்த பழக்க வழக்கங்களே காரணமா இருக்கலாம்!
அதிமுக மீது உண்மையான அக்கறை இருந்தால்.. திருமாவளவன் இதைச் செய்ய வேண்டும்.. புதுச்சேரி அன்பழகன்
சிறுநீரக கொள்ளை குறித்து விரைவில் விசாரணை நடத்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் தகவல்!
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர்... சீமான் ஆவேசம்!
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் இலவச ஷு க்கள், செருப்புகள் விநியோகம்!
என்னோட பெஸ்ட் படம் இது தான்.. பாகுபலி கிடையாது...ராஜமெளலி சொன்ன சர்ப்பிரைஸ்!
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு விராட் கோலி விடுத்த வீடியோ அழைப்பே காரணம்.. கர்நாடக அரசு
லண்டன் பார்லிமென்ட் வளாகத்தில் முதல் முறையாக பாடப்பட்ட ஹனுமன் சாலீசா!
{{comments.comment}}