12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 25, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Feb 25, 2025,10:18 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 13 ம் தேதி செவ்வாய்கிழமை

பிரதோஷம். திருவோண விரதம். காலை 11.09 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது . மாலை 05.11 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.29 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  மிருகசீரிடம், திருவாதிரை


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  சுமாரான நாளாக இருக்கும். சோர்வுடன் காணப்படுவீர்கள். கடின உழைப்பால் மட்டுமே நற்பலன்களை பெற முடியும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும், தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 


ரிஷபம் - பொறுமையும், கவனமும் அவசியம். மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையிடம் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. செலவுகளை அதிகரிப்பதால் கவலை அடைவீர்கள். பதற்றத்தை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.


மிதுனம் - சவால்கள் நிறைந்த சூழ்நிலை உண்டாகும். பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையுடன் சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். எதிலும் பதற்றமின்றி செயல்பட வேண்டும்.


கடகம் -  சிறப்பான நாளாக இருக்கும். நன்மைகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் திறமைகள் வெளிப்படும். பாராட்டு பெறுவீர்கள். வளர்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். பயனுள்ள செலவுகள் செய்வது நல்லது. 


சிம்மம் -  மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு உதவிகரமாக இருக்கும். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சக பணியாளர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் வெளி இடங்களுக்கு சென்று வருவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 


கன்னி -  சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அதனால் மனதில் மகிழ்ச்சியும் ஆறுதலும் தரும். பணியிடத்தில் வேலைகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்குள். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்ப பெரியவர்களில் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.


துலாம் - முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் ஏற்படலாம். பணியிட சூழல் சாதகமாக இருக்காது. பணிகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு போதிய அளவு இருக்காது. வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். பதற்றம் காரணமாக உடலில் பிரச்சனைகள் ஏற்படலாம். 


விருச்சிகம் - சாதகமான நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நன்மைகள் அதிகரிக்கும். பணியில் திறமைகளால் வெற்றி பெறுவீர்கள். பாராட்டும் நற்பெயரும் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சி அளிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும், சேமிப்பு உயரும். 


தனுசு - சிவ சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. பணியிடத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். குடும்ப பிரச்சனை காரணமாக வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். வீட்டிற்காக செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.


மகரம் -  எதையும் செய்வதற்கு முன் பல முறை யோசித்து, திட்டமிட்டு செய்ய வேண்டும். பணிகளை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமுடன், கூடுதல் முயற்சியுடன் செய்ய வேண்டும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். பண வரவு குறையலாம். தேவையற்ற செலவுகள் கவலை அளிக்கும்.


கும்பம் -   எதிலும் பொறுமையுடன் இருக்க வேண்டும். பணிகளை முடிப்பதில் சிரமம் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் அனுசரித்து செல்வது நல்லது. பண இழப்பு ஏற்படலாம் என்பதால் பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.


மீனம் - சிறப்பான நாளாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உறுதியும் தைரியமும் அதிகரிக்கும். பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் புரிதல் ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்