12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 25, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Nov 25, 2024,10:45 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :




குரோதி வருடம், கார்த்திகை 10 ம் தேதி திங்கட்கிழமை

இன்று அதிகாலை 01.21 வரை நவமி, அதற்கு பிறகு தசமி. அதிகாலை 01.37 வரை பூரம், பிறகு உத்திரம். அதிகாலை 01.37 வரை சித்தயோகம், பிறகு காலை 06.14 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்


நல்ல நேரம்: காலை - 6 முதல் 7 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 01.45 முதல் 02.45 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்


இன்றைய ராசிபலன் :


மேஷம் - தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். சிலருக்கு பதவிகள் தேடி வரும். வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.


ரிஷபம் - புதிய முயற்சிகள் பலன் தரும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஏற்படலாம். சுப காரிய பேச்சுக்கள் கை கூடும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.


மிதுனம் - தாய்வழி சொத்துக்கள் கைக்கு வரும். வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கும். காதல் விவகாரங்களில் இருந்த குழப்பங்கள், பிரச்சனைகள் தீரும். வேலை, வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


கடகம் - விடா முயற்சியுடன், கடினமாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உணவு கட்டுப்பாடு அவசியம். மனைவி வழியில் உதவிகள் தேடி வரும். மனைவியுடன் மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொறுமையை கடைபிடிப்பது நல்லது.


சிம்மம் - வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பொது இடத்தில் வெளிப்படையாக பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.


கன்னி - வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்குள். வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். பிரபலங்களில் உதவி கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அடி வயிற்றில் வலி, சளித் தொல்லை வந்து நீங்கும்.


துலாம் - கவனமாக இருக்க வேண்டிய நாள். அவசியமாக இருந்தால் மட்டும் இன்று பயணத்தை மேற்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. இறை வழிபாட்டின் மூலம் நன்மை காண வேண்டிய நாள்.


விருச்சிகம் - அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படும்.வசதி, வாய்ப்புகள் பெருகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய தொழில் துவங்குவீர்கள். மனக்குழப்பத்திற்கு இடம் தராமல் இருப்பது சிறப்பு.


தனுசு - வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து, லாபம் அதிகரிக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.


மகரம் - நெருக்கடிகள் விலகும். வேலைச்சுமை அதிகரித்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மரியாதை கூடும்.


கும்பம் - பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் ஏற்படும். பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக கேரண்டி கையெழுத்து போடுவது தவிர்க்க வேண்டும். மறதி, கோபம் வந்து போகும்.



மீனம் - தொழிலில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்