12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 27, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Nov 27, 2024,09:42 AM IST


தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், கார்த்திகை 12 ம் தேதி புதன்கிழமை

சுப முகூர்த்த நாள். இன்று காலை 05.23 வரை ஏகாதசி, அதற்கு பிறகு துவாதசி. காலை 06.35 வரை அஸ்தம், பிறகு சித்திரை. காலை 06.14 வரை சித்தயோகம், பிறகு காலை 06.35 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை - 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - குழப்பம் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். குழந்தையில் நலனில் அக்கறை செலுத்துவது நலம். வாழ்க்கை துணையிடம் சற்று நிதானத்துடன் பேசுவது  வீண் பிரச்சனைகளை தவிர்க்கும்.


ரிஷபம் - நல்ல செய்திகள் வீடு தேடி வரும். அனுபவங்கள் மூலம் பாடம் கற்பீர்கள். வீட்டிற்கு ஆடம்பர பொருட்கள் வாங் குறிப்பிட்ட தொகையை செலவிடுவீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதமாக இருக்கும்.


மிதுனம் - வேலைகள் எளிதில் முடியும். சூக பணிகள் சாதகமாக அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கா விட்டால் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கும். எதிலும் கவனம் அவசியம்.


கடகம் - நண்பர்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை உதவியாக இருக்கும். முதலீடுகளை தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பேச்சுக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. 


சிம்மம் - எடுத்த பணிகளை விரைவாக முடிப்பீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களை நினைத்து அவ்வப்போது கவலைகள் வந்து நீங்கும்.


கன்னி - பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூர்வீக வழியில் பணம் வர வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேறுவதற்கான பங்குதாரர்கள் கிடைப்பார்கள். 


துலாம் - புதிய எதிரிகள் உருவாகலாம். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். 


விருச்சிகம் - மற்றவர்களிடம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் நடக்கும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். இருந்தாலும் ஆவணங்களை சரி பார்க்கும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.


தனுசு - தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பெற்றோர்களின் ஆசியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்ல தீர்வை தரும்.


மகரம் - வாழ்க்கை துணையுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். வேலைகளில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். உங்கள் எண்ணங்களை உடன் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.


கும்பம் - நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழல் உருவாகும். பிரச்சனைகள் இருந்தால் அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.


மீனம் - மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்ப்புகள் உருவாகலாம். வேலையில் கவனமுடன் இருங்கள். நீண்ட கால நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்ப பிரச்சனைகளை நினைத்து அடிக்கடி கவலைப்படுவீர்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?

news

Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்