சர்வதேச நடன தினம் 2026: கலை உலகில் காலடி எடுத்து வைக்கும் இளம் தாரகை வேதா ஸ்ரீ

Apr 29, 2026,11:25 AM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


ஏப்ரல் 29ஆம் தேதி உலகம் முழுவதும் International Dance Day அதாவது சர்வதேச நடன தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் கற்றுக்கொண்டு திறமையுடன் மிளிரும் சிறுமி வேதா ஸ்ரீ அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறார்.


மூன்றாம் வகுப்பு படித்து வரும் வேதா ஸ்ரீ கடந்த ஓராண்டு காலமாக பரதநாட்டியத்தை ஆர்வத்துடன் கற்றுவருகிறார். குறுகிய காலத்திலேயே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.




அவரது அசைவுகள் துல்லியமாகவும், முகபாவனைகள் மிகவும் அழகாகவும் இருப்பதால் கலை ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் கலை மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஆர்வம் ஆகியவை அவரை எதிர்காலத்தில் சிறந்த நடனக் கலைஞராக உயர்த்தும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.


பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் வேதாஸ்ரீ , இன்னும் பல மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி புகழ் பெற அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




வேதாஸ்ரீ யின் அழகிய நடன அசைவுகள் பல மேடைகளில் மிளிர வாழ்த்துகள்!


சர்வதேச நடன தினத்தின் முக்கியத்துவம்




International Dance Day உலகம் முழுவதும் நடனக் கலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டவும், கலாச்சாரங்களை இணைக்கும் கலை வடிவமாக நடனத்தை கொண்டாடவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


நவீன பாலே நடனத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஜீன் ஜார்ஜஸ் நோவெர் என்பவரின் பிறந்த நாளைத்தான் சர்வதேச நடன தினமாக கொண்டாடுகிறார்கள். UNESCO-வின் சர்வதேச நாடகக் கழகத்தால் இந்த தினமானது 1982ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.


அனைவருக்கும் சர்வதேச நடன தின வாழ்த்துகள்


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி கிழக்கில்.. முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு

news

ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

news

ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?

news

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு

news

"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!

news

திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்

news

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!

news

திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!

news

‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்