- ஸ்வர்ணலட்சுமி
காலாஷ்டமி : விசுவாவசு வருடம் 20 25 மே மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி. சிவபெருமானின் அவதாரமான காலபைரவரை வழிபாடு செய்ய வாழ்வு சிறக்கும், பணப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம், குடும்ப ஒற்றுமை ,தொழில் மேன்மைப்படும்.
ஓம் பைரவனே போற்றி! ஓம் அஷ்டரூபனே போற்றி! ஓம் அஷ்டமி தோன்றலே போற்றி! ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி! ஓம் ஆனந்த பைரவனே போற்றி! ஓம் ஆலய காவலனே போற்றி!
"காலாஷ்டமி "ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி க்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவரை மனதார வழிபாடு செய்ய வாழ்வு வளம் பெருகும். இந்த வழிபாடு செய்யும் நாளே "காலாஷ்டமி "என்று அழைக்கப்படுகிறது. காலத்தின் கடவுளான காலபைரவரை வழிபடும் ஒரு உன்னதமான நாள் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி ஆகும்.
நேரம் :வைகாசி மாதம் மே 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5:51 மணி முதல் மே 21 புதன்கிழமை காலை 4: 55 மணி வரை அஷ்டமி திதி உள்ளது.
கால பைரவர் தோன்றியது: சிவபெருமான் மகாகாலேஸ்வரர் அவதாரம் எடுத்து பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார், ஏனெனில் ஒரு சமயம் பிரம்மா ,விஷ்ணு ,சிவன் மூவர் இடையே வாக்குவாதம் நடந்தது, அப்போது பிரம்மா சிவனைப் பற்றி தவறாக பேசியதால் சிவன் கோபம் அடைந்து ஆக்ரோஷமானார். அவருடைய தீப்பிழம்பிலிருந்து ஒரு உக்கிரமான வடிவத்தில் இருந்து உருவானவரே காலபைரவர் என்று கூறப்படுகிறது. காலபைரவரை வழிபட மனதில் தைரியம் உண்டாகும் .பாதுகாப்பு உணர்வு பெறலாம்.
வழிபாடு: சிவாலயங்களில் முதல் பூஜை விநாயகருக்கும் கடைசி பூஜை பைரவர்க்கும் நடைபெறுகிறது .சூரியன் அஸ்தமனமான நேரத்தில் பைரவருக்கு அஷ்டமி வழிபாடு செய்வது சாலச்சிறந்தது .சிவாலயம் செல்பவர்கள் அபிஷேகப் பொருள்கள், அரளிப்பூ மாலை, எழுமிச்சம்பழமாலை, ரோஜா பூ மாலை ,சிவப்பு வஸ்திரம் வாங்கிச் செல்லலாம் .வடை மாலை சாற்றலாம் .நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் அவரவர் வேண்டுதல்கள் நிறைவேறும்.
வீடுகளில் விளக்கேற்றி பைரவாஷ்டகம் ,பைரவ போற்றி பாராயணம் செய்து பூஜை செய்வது சிறப்பு. நாய் வாகனம் கொண்டவர் காலபைரவர் எனவே இயன்றவர்கள் நாய்களுக்கு உணவளிப்பது சிறப்பு வாய்ந்தது.
செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி இருப்பதினால் காலபைரவர் சன்னதியில் மிளகு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதினால் இழந்த செல்வம் ,பொருள் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவர் வழிபாடு செய்து அனைவரும் வளமுடன் நலமுடனும் வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் . வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}