- ஸ்வர்ணலட்சுமி
சிவாலயங்களில் கார்த்திகை சோமவார நாட்களில் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் ஒரு சிறப்பான வழிபாடே "சங்காபிஷேகம் "ஆகும். சங்குகளில் நிரப்பப்படும் புனித நீரை கங்கையாக பாவித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது செல்வத்தையும்,அருட் செல்வத்தையும் தரும் என்பது ஐதீகம். சகல தோஷங்களை நீக்கி செல்வத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது சங்காபிஷேகம் வழிபாடு.
சிவாலய சங்காபிஷேகம் செய்யும் முறை :

சங்குகள் 108 என்ற கணக்கில் 12 ராசி மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு ராசி மண்டலத்திலும் ஒன்பது சங்குகள் வீதம் வைத்து எட்டு திசைகளிலும் 8 சங்குகள் வைக்கப்பட்டு, நடுவில் ஒரு வலம்புரி சங்கு பிரதானமாக வைக்கப்பட்டு, புனித நீர் நிரப்பப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. சங்கில் இருக்கும் புனித நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வலம்புரி சங்கானது செல்வத்தின் சின்னமாகும். சங்காபிஷேக பூஜை சிவாலயங்களில் கார்த்திகை மாதம் வரும் சோமவாரத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
சங்காபிஷேக பூஜை பலன்கள் :
சங்காபிஷேக பூஜையில் கலந்து கொள்பவர்கள் துன்பங்கள் நீங்கி,மன அமைதி,ஆரோக்கியம் கிடைக்கும். வற்றாத செல்வத்தையும்,பண பிரச்சினைகள் தீர்ந்து தொழில் மேம்பாடு ஏற்படும். வலம்புரி சங்கினை வடக்கு அல்லது தெற்கு நோக்கி வைத்து வழிபடுவது சிறப்பு. மேலும் இந்த பூஜையில் கலந்து கொள்வதனால் நேர்மறை ஆற்றல் பெருகும், மகாலட்சுமி அருளைப் பெறவும், பாவங்கள் போக்கி தோஷ நிவர்த்தி பெற்று,சகல நன்மைகளும் அடையலாம்.
சிலர் வீடுகளில் வலம்புரிச் சங்கு வைத்து பூஜை செய்வது வழக்கம்.அதனை பூஜை அறையில் ஒரு தட்டில் பச்சரிசியை நிரப்பி அல்லது நெல் பரப்பி அதன் மீது சங்கினை வைத்து வழிபடுவது சிறப்பு. வலம்புரி சங்கு என்பது வலது பக்கம் சுழல்வது.இது மிகவும் புனிதமான சங்கின் வகை ஆகும். ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு இணையானது ஒரு வலம்புரிச் சங்கு என்று கூறுவார்கள்.
சங்கில் நீர் அல்லது பால் நிரப்பி,மங்களப் பொருட்கள் வைத்து பூஜை செய்து, மந்திரங்கள் சொல்லி வழிபடுவது சிறப்பு.
சங்கு தோன்றிய வரலாறு:
புராணங்களில் தேவர்களும்,அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது தோன்றிய அரிய பொக்கிஷங்களில் ஒன்று சங்கு ஆகும்.பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய திவ்ய பொருள்களில் சங்கும் ஒன்று என்று கூறப்படுகிறது. கடலில் உருவாகும் சங்குகளில் பலவகை உண்டு. மணி சங்கு,வைபவ சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு, வலம்புரி சங்கு இன்னும் பல உண்டு. இவற்றில் வலம்புரியாக கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்று கூறப்படுகிறது.
வழிபாடு:
108 அல்லது 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, மந்திரங்கள் ஓதி,அந்த நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சங்காபிஷேகம் செல்வ விருத்திக்கு உகந்தது. வீடு,மனை, திருமணம், குழந்தை பிறப்பு,வாகனம், வேலை,தொழில் ஆகியவற்றில் ஏற்படும் தடைகளை நீக்கி, மன நிம்மதி,முக்தி பேறு, சௌபாக்கியம் அளிக்கும்.
கார்த்திகை மாதம் ஆனது தீபங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாதமாகும். தீபமே கடவுள், தீபமே சக்தி,தீபமே அருள், தீபமே அனைத்தும் என நமக்கு உணர்த்தும் சிறப்பான கார்த்திகை மாதம் கடைசி நாள் மற்றும் கடைசி சோமவாரம் ( திங்கட்கிழமை)
சிவா லயங்களில் நடக்கும் சங்காபிஷேகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பவர்கள் தவற விடாதீர்கள்.
மேலும் இதுபோன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}