National Spinach Day.. தேசிய கீரை தினம்.. பெர்சியாவின் மூலிகை.. ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது!

Mar 26, 2025,12:22 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்ச், 26ம் தேதி.. இன்று  National Spinach Day அதாவது தேசிய பசலைக் கீரை தினமாகும்.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26 அன்று "நேஷனல் ஸ்பினாச் டே "அதாவது "தேசிய கீரை தினம்" கொண்டாடப்படுகிறது. Boston Greens  பாஸ்டன்  கிரீன் என்று அழைக்கப்படும் ஸ்பினாச் ஊட்டச்சத்து நிறைந்தது. இது முதலில் பெர்சியாவில் இருந்து (ஈரான் என இப்போது அழைக்கப்படுகிறது) கீரை ஏழாம் நூற்றாண்டில் சீனாவிற்கு வந்தது .அங்கு மக்கள் "பெர்சியாவின் மூலிகை "அல்லது" பாரசீக பச்சை "என்று குறிப்பிட்டனர்.


ஸ்பினாச் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:


*ஸ்பினாச்  ஆசியாவிலும் பாரசீக நாட்டிலும் தோன்றியது.


*இது போப் ஐ  என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தினால் பிரபலமானது. ஏனெனில் ஸ்பினாச் உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடல் பலம் அதிகரிக்கும் என அந்த கார்ட்டூன் இல் காட்டப்பட்டது.


*ஸ்பினாச் உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதினால் கண் பார்வை மேம்படும்.


ஸ்பினாச் டே: 




இந்த நாளை கொண்டாடுவதினால் கீரையின் முக்கியத்துவம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு தர ஏதுவாக இருக்கிறது .இதனை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்றால் உணவில் பருப்புடன் கீரை கடையல் ,சூப் ,சாம்பார், கிரேவி ,பராதா ,ஜூஸ், பீட்சா போன்றவைகளில் ஸ்பினாச் பயன்படுத்தி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


வீட்டுத் தோட்டத்தில் ஸ்பினாச் வளர்க்கலாம். மாடித்தோட்டத்தில் அப்பார்ட்மெண்ட்களில் இருப்பவர்கள் பால்கனியில் சிறிய தொட்டிகளில் வளர்க்கலாம். ஸ்பினாச் பற்றிய ஆரோக்கிய நன்மைகளை சமூக ஊடகங்களில் பகிரலாம்.


ஸ்பினாச் கீரை 'பசலைக்கீரை' என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகளை மக்களிடம் எடுத்துக் காட்டவும் ,இதன் அருமையான  பயன்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,இந்த ஸ்பினாச்டே கொண்டாடப்படுகிறது.


பயன்கள்:


1. இந்தக் கீரையில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து ,ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளது.

2. உடல்நலம் மேம்படவும், எலும்பு வலுப்பெறவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் ஸ்பினச் பயன்படுகிறது.

3.3 உடல் எடையை கட்டுப்படுத்த, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மற்றும் டயாபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்த சர்க்கரை நிலையை சமநிலைப்படுத்த ஸ்பினாச் உதவுகிறது.

4. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்புக்கு உதவுகிறது.

5. போலிக் அமிலம், செல் செயல்பாடு மற்றும் திசு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இது மிகவும் மென்மையான கீரை 6. சமைப்பதற்கு சிறிது நேரம் முன் கழுவி பிரஷ்ஷாக சமைப்பது அதீத நன்மை பயக்கும்.

7. இத்தனை பயனுள்ளது இந்த ஸ்பினாச் கீரை. இந்த ஸ்பினாச் டே மட்டுமல்லாமல் அடிக்கடி  ஸ்பினாச் கீரை உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோமாக.


இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இணைந்திருங்கள்.. தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்