- ஸ்வர்ணலட்சுமி
பாபமோசனி ஏகாதசி: மார்ச் மாதம் 25, 2025 பங்குனி பதினோராம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திரம் சேர்ந்து வருவது மிகுந்த விசேஷமான நாள் ஆகும். இன்று வரும் ஏகாதசி பாப மோச்சனி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
பாப மோச்சனி ஏகாதசி என்பது தமிழ் மாதமான பங்குனியில் அதாவது மார்ச் -ஏப்ரல் தேய்பிறை ஏகாதசி திதியில் வரும் ஒரு புனித நாள் ஆகும்.
நேரம்: மார்ச் 25 அன்று காலை 5:05 மணி முதல் மார்ச் 26 புதன்கிழமை காலை 3:45 மணி வரை ஏகாதசி திதி உள்ளது.
இந்நாளில் பகவான் விஷ்ணுவின் அருளை பெறுவதற்காக சிலர் வீடுகளில் கடுமையான விரதம் இருப்பார்கள். விரதம் இருந்து வழிபடுவதால் தங்கள் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
இதனைப் பற்றிய புராணக்கதை:
இந்த விரதத்தை விளக்கும் ஒரு புராணக்கதை உண்டு. மேதாவி முனிவர சைத்ரரதா என்கிற வனத்தில் மிகக் கடுமையாக தவம் இருந்தார் .அவரின் தவத்தை கலைக்க காம தேவன் மஞ்சு கோசா அப்சரையை இடையூறு செய்ய அனுப்பினார். அவளின் அழகில் மயங்கி விட்டார் முனிவர். அவளுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் .பின்னர் தன்னுடைய தவறை உணர்ந்து மஞ்சு கோசாவை காட்டேரி ஆக ஆகும்படி சாபம் விட்டார். அவ்வாறே நடந்தது .பிறகு, மஞ்சு கோசா சாப விமோசனம் கேட்டபோது பாபமோச்சனி ஏகாதசி விரதத்தை இருப்பதன் மூலம் சாபத்திலிருந்து விடுபட முடியும் என்றார்.
இந்த விரதத்தின் மூலம் இருவரும் அவர்கள் பாவங்களில் இருந்து விடுபட்டனர். 'பாப'என்றால் பாவம் 'மோச்சனி' என்றால் விடுதலை 'பாப மோச்சனி ' என்ற பெயரின் அர்த்தம் பாவங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.
வீடுகளில் மகாவிஷ்ணு படத்திற்கு துளசி, மல்லிகை மலர்கள், பால் பழங்கள் ,பொங்கல், நெய் விளக்கு ஏற்றி அவரவர் உடல்நிலை கேட்ப விரதம் மேற்கொள்ளவும். "ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்" படிப்பது விரதத்தின் முக்கிய பங்கு ஆகும். அருகில் உள்ள விஷ்ணு ஆலயம் சென்று பிரார்த்தனை செய்வது அதீத நன்மை பயக்கும்.
இந்த விரதம் கடைபிடிப்பதால் பக்தர்கள் கடந்த கால பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய பாவங்கள் செய்வதை தவிர்க்கவும், அவர்களின் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காகவும் வழிபாடு முறைகள் அனுஷ்டிக்கப்படுகிறது. தங்களின் பாவங்களை நீக்கி தூய்மைப்படுத்தவும், நல்லொழுக்கமான வாழ்க்கை முறையை நோக்கிச் செல்லவும் இந்த விரதத்தின் சிறப்பான அம்சமாக அமைந்துள்ளது. பாவ விமோசனம் பெற்று ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியும் என்பது ஐதீகம்.
மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்
Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா
C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?
போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!
பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!
{{comments.comment}}