Sankatahara Chaturthi: சங்கடங்கள் நீங்கி.. நல்வாழ்வு அருளும்.. சங்கடஹர சதுர்த்தி விரதம்!

May 16, 2025,12:30 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வைகாசி- 2 விசுவாவசு வருடம் 2025 மே மாதம் 16ஆம் நாள் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி விரதம். வைகாசி மாதம் என்பது தமிழ் ஆண்டின் இரண்டாவது மாதம். இந்த மாதம் விவசாயத்துக்கு ஏற்ப வளர்ச்சி மற்றும் நன்மைகள் பயக்கும்  நல்ல காலமாக கருதப்படுகிறது. வைகாசியில் வரும் சங்கடஹர சதுர்த்தி முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் புனித நன்னாளாகும்.


சங்கடஹர சதுர்த்தி என்பது பரம்பொருள் விநாயகர் பக்தர்களால் ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தி அதாவது  கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி திதியில் இந்த விரதம் இருப்பது துன்பங்கள் கரைந்து, சங்கடங்கள் குறைந்து, நன்மையும் ,நம்பிக்கையும் பிறக்கும் நன்னாள் ஆகும்.


சிறப்புக்கள்:" சங்கடஹர சதுர்த்தி" என்பது விநாயகர் அனைத்து இடையூறுகளையும் நீக்கி நல்வாழ்வு வாழ அருள் புரிவார்." சங்கட" என்பது துன்பங்கள் தடைகள் இடையூறுகள் "ஹர" என்பது நீக்குபவர், போக்குபவர் என்பதை குறிக்கும் .அனைத்து இடையூறுகளையும் நம் விநாயகப் பெருமான் நீக்கி நமக்கு பக்க பலமாக விளங்குவார் .




விரதம் கடைபிடிக்கும் முறைகள் :இப்பொழுது கோடை காலமாக இருப்பதனால் அதிக உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதற்கு ஏற்றார் போல, அவரவர் உடல் நிலைக்கு ஏற்றார் போல ,பழங்கள், பழ ஜூஸ்கள், நிறைய தண்ணீர் குடிக்கவும், பால் நீர்மோர் எடுத்துக் கொண்டு விரதம் கடைபிடிப்பது சிறப்பு.


இன்று மாலை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகருக்கு விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. 


இன்று படிக்கும் மந்திரம் என்னவென்று? பார்ப்போமா..


"சங்கட நாசன கணபதி" ஸ்தோத்திரம் அல்லது "விநாயகர் அஷ்டோத்திரம்" அல்லது விநாயகர் அகவல் போன்றவற்றை படிக்கலாம்.


'ஓம் கம் கணபதியே நமஹ! ஓம் விக்ன விநாயகா போற்றி !ஓம் கமுகாய நமஹ !ஓம் ஏக தந்தாய நமஹ !ஓம் கபிலாய நமஹ! ஓம் கஜகர்ணாய நமஹ !ஓம் லம்போதராய நமஹ! ஓம் விகடாய நமஹ! ஓம் விக்னராஜாய நமஹ !ஓம் சித்தி விநாயகாய நமஹ! ஓம் கஜான நாய நமஹ! ஓம் வக்கரதுண்டாய நமஹ! ஓம் சூ ர் பகர்னாய நமஹ! ஓம் ஹேரம்பாய நமஹ! ஓம் சங்கடஹர கணபதியே நமஹ!


இன்று சந்திரனை தரிசித்து விநாயகருக்கு நெய் விளக்கு ஏற்றி, சுண்டல் ,மோதகம், அருகம்புல் மாலை, மலர்கள், சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. மேலும் பொது தேர்வு எழுதிய மாணவ மாணவியர் எந்த படிப்பில் அடுத்து படிக்க எண்ணுகிறீர்களோ அதற்கு முழு மனதோடு விநாயகரை வணங்கி வழிபட நல்வழி அமைத்துக் கொடுப்பார் .படிப்பில் உள்ள தடைகள் நீங்கும். வாழ்க்கையில் ஒவ்வொருவரும்  சந்திக்கும் தடைபாடுகள், தொழில் ,திருமணம், கல்வி ,மருத்துவம், கடன் பிரச்சினைகள் ஆகியவற்றில் உள்ள தடைகள் நீக்கி விநாயகர் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவார்.


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கவிதாயினியின் இரவுகள்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!

news

மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

நான் பாடும் மெளன ராகம்... A song that never ends!

news

எளியவர், ஏற்றம் கண்டவர்.. சுயசார்பு சிந்தனையை நடைமுறையில் காட்டியவர்!

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்