பல் வலியா ? பூச்சி பல்லா?.. எப்படிக் கண்டுபிடிக்கலாம்.. எப்படி சரி செய்யலாம்!

Feb 09, 2026,10:54 AM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் சந்திக்கும் பிரச்சனை பல் வலி  மற்றும் பூச்சி பல்  பாதிப்பாகும். இதை எப்படி தவிர்ப்பது என்று தேசிய பல் வலி தினத்தில் (பிப்ரவரி 9) தெரிந்து கொள்வோம்.


பல் வலி என்பது மனிதன் அனுபவிக்கும் மிகக் கடினமான மற்றும் சகிக்க முடியாத வலிகளில் ஒன்றாகும். ஒரு சிறிய பல் பிரச்சனை கூட மனிதனின் தினசரி வாழ்வை முழுமையாக பாதிக்கும் அளவுக்கு வலியை ஏற்படுத்தும். இதனால் பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் நாள் தேசிய பல் வலி தினமாக (National Toothache Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 


இந்த நாள் பல் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல் வலியை தவிர்க்கும் வழிமுறைகளை அறியவும் உதவுகிறது.


பல் வலி என்பது பல்லின் உள்ளே அல்லது பல் சுற்றியுள்ள ஈறு பகுதியில் ஏற்படும் வலி ஆகும். இந்த வலி சில நேரங்களில் மென்மையானதாகவும், சில நேரங்களில் தாங்க முடியாத அளவுக்கு கூர்மையானதாகவும் இருக்கலாம். சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை சாப்பிடும்போது, இனிப்புகளை உண்ணும் போது அல்லது பல்லை கடிக்கும்போது பல் வலி அதிகரிக்கலாம்.


பல் வலி என்பது ஒரு நோய் அல்ல; அது ஒரு பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே அதற்கான காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.


பல் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:




பல் சிதைவு


பல்லின் மேற்பரப்பில் உள்ள மின்சாரம் (எனாமல்) சேதமடைந்து உள்ளே நோய்க்கிருமிகள் புகும்போது பல் சிதைவு ஏற்படுகிறது.


ஈறு நோய்கள்


ஈறுகளில் ஏற்படும் அழற்சி, இரத்த சிந்தல் மற்றும் தொற்று பல் வலியை உண்டாக்கும். பல் முறிவு அல்லது விரிசல்.

கடினமான பொருட்களை கடிப்பதால் பல்லில் விரிசல் அல்லது முறிவு ஏற்பட்டு வலி உண்டாகும்.


ஞானப் பல் 


ஞானப் பல் வளரும்போது ஏற்படும் அழுத்தம் மற்றும் தொற்று பல் வலிக்கு காரணமாகும்.


பல் தொற்று


பல் வேர் பகுதியில் ஏற்படும் சீழ் தொற்று கடும் வலியை உண்டாக்கும்.


தேசிய பல் வலி தினத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு முக்கியமான தினமாகும். பலர் பல் வலி ஏற்பட்ட பிறகே பல் மருத்துவரை அணுகுகிறார்கள். ஆனால் இந்த நாள் பல் வலி வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.


பல் சுகாதாரத்தின் அவசியத்தை உணர்ந்து, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல் பராமரிப்பை ஊக்குவித்து, முறையான பல் மருத்துவ பரிசோதனையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.


பல் வலியால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சலை குறைத்து, பல் வலியைத் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி 

பல் வலி வராமல் இருக்க சில எளிய பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.


தினமும் இரண்டு முறை காலை மற்றும் இரவு பல் துலக்குவது மிகவும் முக்கியம் ஆகும்.


பல் இழை, பற்களுக்கு இடையில் சிக்கிய உணவுத் துகள்களை அகற்ற உதவுகிறது. அதிக இனிப்பு மற்றும் சர்க்கரை தவிர்த்தல் இனிப்புகள் பல் சிதைவிற்கு முக்கிய காரணம் ஆகும்.


ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்தல் அவசியம். சத்தான உணவு பழக்கம், பால், காய்கறிகள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் பற்களை வலுப்படுத்தும்.


பல்வலி வந்தால், தற்காலிக தீர்வாக உப்புக் கலந்த வெந்நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.


சொந்தமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, வலியை அலட்சியப்படுத்தாமல் சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பல் வலி என்பது சிறிய பிரச்சனை போல தோன்றினாலும், அதை அலட்சியப்படுத்தினால் பெரிய சுகாதார சிக்கலாக மாறக்கூடும். தேசிய பல் வலி தினம் பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் ஒரு விழிப்புணர்வு தினமாகும்.


ஆரோக்கியமான பற்கள் நல்ல உடல் நலத்திற்கும், அழகான புன்னகைக்கும் அடிப்படையாகும். எனவே நாம் அனைவரும் பல் பராமரிப்பை வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கொண்டு, பல் வலியின்றி ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரேமலதா விஜயகாந்த் அவர்களே.. இந்த அநீதி உங்களுக்குத் தெரியுமா.. கம்ப்யூட்டர் ஆசிரியரின் கேள்வி!

news

உண்மையான அன்பு.. ஒரு நிமிடக் கதை (9)

news

பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்

news

இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்

news

ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!

news

ரீல்ஸ் ஆட்சி நடத்தாம ரியல் ஆட்சி நடத்துங்க... சட்டசபையில் அதிரடி காட்டிய உதயநிதி

news

திமுகவுக்குப் பதிலடியாக.. கருணாநிதியின் ஆயுதத்தைக் கையில் எடுத்த முதல்வர் விஜய்!

news

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ் அன்று எழுதியது!

அதிகம் பார்க்கும் செய்திகள்